செய்தி விவரங்கள்

காமெடி நடிகர் சந்தானத்தை கைது செய்ய இது தான் காரணமாம்..!

காமெடி நடிகர் சந்தானத்தை கைது செய்ய இது தான் காரணமாம்..!

காமெடி நடிகர் சந்தானம் சண்முகசுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் அவரையும், அவருக்கு ஆதரவாக இருந்த வக்கிலும், பா.ஜ., பிரமுகருமான பிரேம் ஆனந்த் என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பிரேம் ஆனந்த் முகத்தில் காயம் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பிரேம் ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் சந்தானம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேப்போன்று சந்தானத்திற்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் சண்முக சுந்தரம் மற்றும் பிரேம் மீது சந்தானமும் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

காமெடி நடிகர் சந்தானத்தை கைது செய்ய இது தான் காரணமாம்..!

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார், சந்தானத்தை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதனிடையே தான் எந்தநேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் முன்ஜாமின் கோரி சந்தானம் சென்னை, ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது பிரேம் ஆனந்த் தரப்பில் சந்தானத்திற்கு முன் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பிரேம் ஆனந்த் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.

காமெடி நடிகர் சந்தானத்தை கைது செய்ய இது தான் காரணமாம்..!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு