செய்தி விவரங்கள்

எனக்கு துணி மாற்ற கேரவன் வேண்டாம், சர்ச்சையை கிளப்பியுள்ள நடிகை..!

தமிழில் தடையறத்தாக்க, புத்தகம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ராகுல் பிரீத் சிங். ஆனால் அந்த படங்கள் எதுவுமே அவருக்கு கைகொடுக்காததால் அதையடுத்து தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் தெலுங்குக்கு சென்று நடித்து வந்தார். அவர் நடித்த சில படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடிக்கவே இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார் ராகுல்பிரீத்சிங். அதோடு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அவருக்கு அடுத்தபடியாக தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகள் கிடைத்துள்ளன. மேலும், ஸ்பைடர் படத்தை அடுத்து கார்த்தி நடித்து வரும் தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் நடித்து வருகிறார் ராகுல் பிரீத் சிங். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் காட்டுப் பகுதிகளில் தான் நடைபெற்று வருகிறது. அதனால் கேரவன் உள்ளிட்ட போதுமான வசதிகளை செய்து கொடுக்க முடியாமல் திணறியிருக்கிறார்கள் படக்குழுவினர்.

ஆனால் அதைப்பார்த்த ராகுல்பிரீத்சிங், கேரவன் தேவையில்லை. எனக்கு உடை மாற்றுவதற்கு சிறிய அறை வசதிகள் செய்து கொடுத்தாலே போதும் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்கிறேன் என்று தாமாக முன்வந்து சொன்னாராம். விளைவு, ஆரம்பத்தில் கால்சீட் சொதப்பல் செய்வதாக ராகுல்பிரீத்சிங் மீது சில புகார்கள் கூறப்பட்டபோதும், அவரது இந்த பெருந்தன்மை காரணமாக இப்போது அந்த படக்குழுவே அவரை புகழ்ந்து தள்ளி வருகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு