செய்தி விவரங்கள்

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை நிறுத்தும்படி அதிரடி போராட்டம்

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை நிறுத்தும்படி அதிரடி போராட்டம்

பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கிறார்கள்.

மேலும், ஒரு படப்பிடிப்பிற்காக ஆர்யா கும்பகோணம் சென்றுள்ளார். கும்பகோணத்தில் ஒரு விடுதியில் தங்கியுள்ளார் ஆர்யா. அந்த விடுதிக்கு வெளியே மாதர் சங்கத்தை சேர்ந்த சில பெண்கள் கூடி பிரபல தொலைக்காட்சியில் நடத்தி வரும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை நிறுத்தும்படி போராட்டம் செய்துள்ளார்கள்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை நிறுத்தும்படி அதிரடி போராட்டம்

பிறகு அங்கு விரைந்து சென்ற காவல் அதிகாரிகள் உடனே அந்த பெண்களை சமாதானம் செய்து பேசி திரும்ப அனுப்பிவைத்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் நடக்கும் சில விஷயங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது உண்மை தான்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு