செய்தி விவரங்கள்

மெர்சல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் பிரபல நாயகி!

விஜய் அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் Vijay 61 படத்திற்கு மெர்சல் என பெயரிடப்பட்டு சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஒரு பிரபல நாயகி ஒப்பந்தமாகியுள்ளார். 7ம் அறிவு, ராஜா ராணி, குற்றம் 23 போன்ற பல படங்களில் துணை நாயகியாக நடித்தவர் நடிகை மிஷா கோஷல், இவர் ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து பிரபலமானவர்.

இவர் தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்சல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் அவர் ஒப்பந்தமாகியுள்ளதாகவும், முக்கியமான கதாபாத்திரம் தான் என்றும் படக்குழு தெரிவிக்கின்றன.

மேலும், த்ரிஷா கதாநாயகியாக நடிக்கும் 1818 திரைப்படத்தில் மிஷா கோஷல் இரண்டாம் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு