செய்தி விவரங்கள்

பிரபல நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியிடம் நூதன முறையில் திருட்டு!!

சேலம் பேருந்து நிலையத்தில், நகை மற்றும் பணத்துக்காக பிரபல நகைச்சுவை நடிகர் கொட்டாட்சியிடம் ஆட்டோ ஓட்டுனர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் கொட்டாச்சி. இவர் சென்னை போரூர் பகுதியில் வசித்து வருகிறார்.

கோவையில் படப்பிடிப்பு முடித்துவிட்டு நேற்று நள்ளிரவு சேலம் வழியாக சென்னை திரும்பினார். அப்போது, சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து நிறுத்தத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.

அப்போது, ஆட்டோ ஓட்டுனரும், ஆட்டோவில் இருந்த மற்றொருவரும் கொட்டாச்சியின் தங்க சங்கிலி, செல்போன், அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு, பாதிவழியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

நள்ளிரவில் பாதிவழியில் இறக்கிவிடப்பட்ட நடிகர் கொட்டாச்சி, நண்பரின் உதவியுடன் சூரமங்கலம் போலீசில் புகாரளித்தார். அவர்கள் பள்ளப்பட்டி செல்லுமாறு அலைகழித்துள்ளனர். ஒருவழியாக வழக்கை பெற்றுக்கொண்ட சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு