செய்தி விவரங்கள்

வித்தியா பாலனுக்கு அடித்த யோகம்; விரைவில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்!

தனது நடிப்பால் தனியிடம் பிடித்தவர்தான் நடிகை வித்யாபாலன். முக்கியமாக, மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் சிறிது தயக்கம் இன்றியும் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றவர் இவர்.

இப்பொழுது இவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக இந்திய அரசு ஒரு அற்புதமான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அதாவது மத்திய திரைப்பட தணிக்கை குழு தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த தணிக்கைக் குழுவில் நடிகை வித்யா பாலன், கௌதமி தடிமல்லா மற்றும் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் குறித்து நடிகை வித்தியாபாலன்,

"CBFC இல் சேர நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இதன் உறுப்பினராக இருந்து என் கடமைகளை சரியாக நிறைவேற்றுவதை நான் நம்புகிறேன், இந்த புதிய மற்றும் அற்புதமான கட்டத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம், எங்கள் சினிமா, இன்று நாம் வாழும் சமுதாயத்தில் யதார்த்தங்கள் மற்றும் சிக்கல்களைப் பிரதிபலிக்கத்தக்கதாய் அமையட்டும்." என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு