செய்தி விவரங்கள்

சினேகா தயாரிக்கும் இந்த படத்தில் டாப்ஸி ஹீரோயின் ஆகா நடிக்கிறார்..!

சினேகா தயாரிக்கும் இந்த படத்தில் டாப்ஸி ஹீரோயின் ஆகா நடிக்கிறார்..!

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பிரபலமாக இருந்தவர் நடிகை டாப்ஸி, இப்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். அங்கு டாப்ஸிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. 'ஜூட்வா 2' படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருக்கும் டாப்ஸி அந்தப் படத்தில் வருண் தவானுடன் லிப் லாக் சீன்களிலும் நடித்திருக்கிறார்.

சினேகா தயாரிக்கும் இந்த படத்தில் டாப்ஸி ஹீரோயின் ஆகா நடிக்கிறார்..!

அடுத்தபடியாக ஷாத் அலி இயக்கத்தில், தில்ஜித் தோஸன்ஜி ஜோடியாக நடிக்க உள்ளார் டாப்ஸி. இந்தப் படம், முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் சந்தீப் சிங்கின் காதல் கதையை மையமாக வைத்து உருவாக உள்ளது. இதில், சந்தீப் சிங்காக தில்ஜித் நடிக்க, அவரது காதலியாக டாப்ஸி நடிக்கிறார்.

சினேகா தயாரிக்கும் இந்த படத்தில் டாப்ஸி ஹீரோயின் ஆகா நடிக்கிறார்..!

இந்த படத்தில் டாப்ஸியும் ஒரு ஹாக்கி வீராங்கனையாக நடிக்க உள்ளார். இதற்காக தில்ஜித்தும், டாப்ஸியும் ஹாக்கி பயிற்சி பெற்று வருகின்றனர். பெயரிடப்படாத இப்படத்தை சினேகா ரஞ்சனி தயாரிக்கிறார். அக்டோபர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு