செய்தி விவரங்கள்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் - கத்துக்குட்டியின் கோரிக்கை!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத்தேவையில்லை என நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் தெரிவித்துள்ளார். அவர்
எப்பொழுதும் திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவே இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆயத்தமாகி வருவதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வரும் நிலையில், ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். அதேநேரத்தில் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சியினர் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

திரை துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனவும், தமிழன் அல்லாதவர்கள் தமிழனை ஆள நினைக்க கூடாது என்றவாறும் கோஷங்களும் கிளம்பி வருகிறது. 

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கவுதம் கார்த்திக், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது, அவர் என்றும் நடிகராகவே இருக்க வேண்டும், ரஜினிகாந்த் எப்போதும் திரையுலக சூப்பர் ஸ்டாராகவே இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தன் தந்தை கார்த்திக், நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வந்தாலும், தான் எக்காரணத்தை கொண்டும் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் கூறியுள்ளார் நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு