செய்தி விவரங்கள்

இந்த நிலைக்கு என் ரசிகர்கள் தான் காரணம்... உணர்ச்சிவசப்படும் திரிஷா...

1999ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை திரிஷா, 2002ம் ஆண்டு சூர்யாவுடன் நடித்த மௌனம் பேசியதே படம் தன் முதல் படமாய் வெளிவந்தது.

கடந்த 15 ஆண்டிருக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக விளங்கி வருகிறார் திரிஷா. இந்நிலையில் மோகிணி, கர்ஜனை, சதுரங்கவேட்டை-2 என்று அடுத்தடுத்து திரிஷா நடிப்பில் படங்கள் வரிசை கட்டி ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. 96 மற்றும் 1818 படங்களிலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் கால் பதிக்கிறார்.

இதற்கிடையே சினிமா அனுபவம் பற்றி பேசியுள்ளார். அதன்படி, 15 ஆண்டுக்கும் அதிக சினிமா பயணம், 50க்கும் அதிக படங்கள் உண்மையிலேயே ரொம்ப ஆச்சரியமாவும், ரொம்ப மகிழ்ச்சியாவும் இருக்கு. நானா இத்தனை தூரம் கடந்து வந்திருக்கேன்னு பிரமிப்பா இருக்கு. நான் அப்படி நடிச்சேன், இப்படி நடிச்சேன், அதை சாதிச்சேன், இதை சாதிச்சேன்னு பெருசா சொல்லிக்க எதுவும் கிடையாது. மிக வெற்றிகளையும் பார்த்திருக்கேன்.

அதே வேலையில் பெரிய, பெரிய தோல்விகளையும் சந்திச்சிருக்கேன். ஆனால், ரெண்டையும் நான் சமமா பார்த்த மாதிரியே என் ரசிகர்களும் பார்த்தாங்க. அதுதான் என்னை இன்னும் பெருசா ஆச்சரியப்பட வைக்கிற விஷயமா தெரியுது என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், அவங்க இல்லைன்னா நான் இல்லை. இத்தனை வருஷம் கடந்தும் சினிமா என்னை நல்ல நிலையில ஏத்துக்கிட்டு கொண்டாடுதுன்னா, அதுக்கு என் ரசிகர்கள்தான் காரணம். அவங்களுக்குத்தான் என் முதல் நன்றி என உணர்ச்சிபொங்க தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு