செய்தி விவரங்கள்

ஜூலியின் பிரார்த்தனைகள் நிறைவேறியது!! ட்விட்டரில் நன்றி மழை பொழிந்த ஜூலி!!

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு ஜூலிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஜல்லிக்கட்டுக்காக போராடிய பொண்ணு என்று பாராட்டியவர்களே இன்று ஜூலியை போலி என்று திட்டுகிறார்கள்.

ஜூலியின் பிரார்த்தனைகள் நிறைவேறியது!! ட்விட்டரில் நன்றி மழை பொழிந்த ஜூலி!!

மேலும் ஜூலி ஒரு வயது குழந்தை ககனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு ரூ.20 லட்சம் தேவைப்படுகிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ககன் வீட்டாரால் இதை சமாளிக்க முடியவில்லை. தயாள குணம் உள்ளவர்கள் தயவு செய்து உதவுங்கள் என்று வீடியோ மூலம் ஜூலி கேட்டிருந்தார்.

தற்போது குழந்தை ககனுக்கு நல்லபடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரின் தந்தை கல்லீரல் தானம் செய்துள்ளார். இதற்கு தன் ட்விட்டர் பக்கத்தில் ஜூலி "பிரார்த்தனைகள் நிறைவேறியது.. கடவுளுக்கு நன்றி...அறுவை சிகிச்சை முடிந்து ஜசியுவில் வைக்கப்பட்டுள்ளார் ககன். குழந்தை மற்றும் அவருக்கு கல்லீரல் தானம் செய்த தந்தை ஆகிய இருவரும் நலம். ககனுக்காக உதவி செய்தவர்கள், பிரார்த்தனை செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி" என்று ட்வீட்டியுள்ளார் ஜூலி.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு