செய்தி விவரங்கள்

ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சனின் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்..??

கணவர் அபிஷேக் பச்சனின் படத்தில் நடிக்க மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய். பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து குச் நா கஹோ, குரு மற்றும் சர்க்கார் ராஜ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா, அபிஷேக்கை வைத்து படம் தயாரிக்க நினைத்தார். அனுராக் கஷ்யப் தயாரிக்கும் பாலிவுட் படம் குலாப் ஜாமூன். அந்த படத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்குமாறு ஐஸ்வர்யா ராயிடம் கேட்கப்பட்டது. குலாப் ஜாமூன் படக் கதையை கேட்ட ஐஸ்வர்யா தனது கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார். கதையை மாற்றிவிட்டு வாங்க பிடிச்சிருந்தால் நடிக்கிறேன் என்று பின்னர் கூறினாராம். ஐஸ்வர்யா படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதனால் தான் கணவரின் படமாக இருந்தாலும் கூட நடிக்க முடியாது என்று தில்லாக கூறியுள்ளார். ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் அடுத்ததாக அனில் கபூரின் ஃபேனி கான் படத்தில் நடிக்கிறார். மேலும் மணிரத்னம் படத்திற்கும் ஓகே சொல்லியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு