செய்தி விவரங்கள்

இசை அமைப்பாளர் இளையராஜா இனிமேல் பேசமாட்டாராம்..!!!

வேலு பிரபாகரன் இயக்கி நடித்து வெளியான ஒரு இயக்குனரின் காதல் டைரி. இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் இளையராஜா. அந்த படத்தின் பிரஸ்மீட்டில் அவர் கலந்து கொண்டபோது, அவரை புகழ்ந்து பேசுகிறோம் என்று பேசிய சிலரது பேச்சு அவரை கோபமடைய செய்துவிட்டது. குறிப்பாக, பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, இவ்வளவு சாதனை செய்துள்ள இளையராஜாவை ஓரங்கட்டுகிறார்கள்.

அவர் பெயரை ஒரு பள்ளிக்கூடத்துக்கு, நான்கு சாலைகளுக்காவது வத்திருக்க வேண்டாமா என்று பேசினார். அதைக்கேட்டு கோபமடைந்த இளையராஜா, என் பேரை பள்ளிக்கூடத்துக்கு, சாலைக்கு வைக்கனும்னு நான் கேட்டேனா என்று சினேகனைப் பார்த்து கேட்டவர், மக்களோட மனசுல நான் ஓடிக்கிட்டிருக்கேன். அது ஒன்றே எனக்கு போதும் என்று இருக்கையில் அமர்ந்தபடியே சொல்லிவிட்டு வேகமாக எழுந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் இசையமைத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடந்தபோது இளையராஜா கலந்து கொண்டார். அவர் மேடையேறியதும். அக்னிநட்சத்திரம் படத்தில் இடம்பெற்ற ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா -என்ற பாடல் சிறிது நேரம் ஒலிக்கப்பட்டது. அதையடுத்து அந்த படத்தில் நடித்துள்ள நடிகர்-நடிகையர், இயக்குனர், தயாரித்துள்ள நடிகர் விஜயசேதுபதி உள்பட அனைவரும் படம் குறித்து பேசினர். ஆனால் இளையராஜாவை பேச அழைத்தபோது மறுத்து விட்டார். கடைசியாக அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பேசாமலேயே பிரஸ்மீட் நிறைவு பெற்றது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு