செய்தி விவரங்கள்

தமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழும் ரஜினி - பாரதிராஜா கடும் விமர்சனம்.!

தமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழும் ரஜினி - பாரதிராஜா கடும் விமர்சனம்.!

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஐபிஎல் போட்டிகளை தமிழகத்தில் நடத்த கூடாது என சென்னை சேப்பாக்கம்  மைதானத்தை சுற்றிலும் கடுமையான போராட்டங்கள் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளால் நடத்தப்பட்டது. அப்போது, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சில காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர் போராட்டக்காரர்களும் - பொதுமக்களும்.

போராட்டக்காரர்கள் காவல்துறையை தாக்கியது மாபெரும் குற்றம் எனவும், வன்முறையை உச்சம் எனவும் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார் நடிகர் ரஜினி.

இந்நிலையில், நடிகர் ரஜினியை மிக கடுமையாக விமர்சித்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி பிரச்சினை குறித்து தற்போது பேசும் ரஜினிகாந்த இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும், நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கும்போதும் தமிழர்களுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்காதது ஏன். சீருடையில் இருந்தவரும் எங்கள் தமிழன்தான். எங்கோ கூட்டத்தில் அடையாளம் இல்லாத ஒருவன் அல்லது இந்த நிகழ்ச்சியை தடைப்படுத்த செய்த செயலுக்கு நாங்கள் வருந்துகிறோம். நீங்கள் எங்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம். பேசும் போது எதை பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள். இல்லாவிட்டால் எங்கள் தமிழ் மக்களால் நீங்கள் ஓரங்கட்டப்படுவீர். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்" என மிக காட்டமாக ரஜினியை விமர்சித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு