செய்தி விவரங்கள்

மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று கொண்டாடப்படும் போகிப்பண்டிகை!

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று, (31ம் நாள்), அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுவது போகிப்பண்டிகை ஆகும். கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை ஜனவரி 13 ஆம் திகதியில் கொண்டாடப்படும். போகிப் பண்டிகையானது, இந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.

மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று கொண்டாடப்படும் போகிப்பண்டிகை!

பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாக இந்த நாள் கருதப்படுகிறது. அதாவது, பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் 'போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி 'போகி' என்றாகிவிட்டது. பழங்காலத்து வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால், நடந்து முடிந்த நல்ல நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்றனர் நம் முன்னோர்.

வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தி குப்பைகளை போட்டு தீயிட்டு கொளுத்தி, வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் ருத்ர கீதை ஞான யக்ஞம் என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி, வீட்டை மட்டுமல்ல, மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

போகிப்பண்டிகையன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு