செய்தி விவரங்கள்

சக்கைப் போடு போடும் சராஹா; உண்மையில் இதில் என்னதான் இருக்கிறது?

தற்போது பேஸ்புக், டுவிட்டர் என எங்கு சென்றாலும் நம் கண்களில் சராஹா அப்டேட் தான் தட்டுப்படுகிறது. இது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக ஆக்கிரமித்து வருகிறது. 
 
முதற்கட்டமாக எகிப்து மற்றும் சவுதி அரேபியாவில் பிரபலமான சராஹா செயலி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல லட்சம் பேர் டவுன்லோட் செய்து பயன்படுத்துமளவுக்கு படு வேகமாக வைரலாகியது. இதைத் தொடர்ந்து இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலும் இந்த செயலி சொற்ப காலக்கட்டத்தில் பல லட்சம் பேர் டவுன்லோட் செய்யுமளவுக்கு பரவிவிட்டது.
 
சரி இந்த சராஹா செயலி என்றால் என்ன என்று பார்ப்போம்.
 
முகம் தெரியாவதவர்களிடம் இருந்து பரிந்துரை மற்றும் கருத்துக்களை சராஹா செயலியில் பெற முடியும். இந்த செயலி மற்றவர்கள், சிலவேளைகளில் முகம் தெரியாதவர்கள் தரும் கருத்துக்களை கொண்டு ஒருவர் தன்னை சுயமாக மாற்றிக் கொள்ள முடியும் என இந்தச் செயலியை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
சராஹா செயலியில் நீங்கள் உருவாக்கும் சுய விபரத்தினை (Profile) யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். மேலும் இதில் மற்றவர்களின் சுய விபரங்களைப் பார்த்து அவர்களுக்கு செய்தி அனுப்ப முடியும். அவர்கள் Login செய்தாலும் மற்றவர்கள் அனுப்பும் செய்தி மட்டுமே தெரியும், அதை யார் அனுப்பியது என்ற தகவல் தெரியாது. நீங்கள் மெசேஜ் அனுப்பியர் செயலியை திறந்ததும் அவரது Inboxஇல் செய்தி மட்டும் தெரியும். இப்படி வருகின்ற செய்திகளை நீங்கள் block செய்ய முடியும். அதைவிட அவற்றை அழிக்கவோ, பதிலளிக்கவோ அல்லது விருப்பத்தேர்வு என குறிப்பிட்டு எப்போது வேண்டுமானாலும் மிகவும் இலகுவாகா கண்டறிய முடியும்.
 
தற்பொழுது இது அனைத்து மட்டத்திலும் அதிக பிரபலமாகி வருவதால் இதன் பயன்பாட்டை மேலும் மேம்படுத்த இதை உருவாக்கியவர்கள் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர் என்று புதிய தகவல்கள் சொல்கின்றன.
 
தனி நபர் பாதுகாப்பு அம்சமாக தேடல் முடிவுகளில் உங்களது பெயர் யார் யாருக்கு தெரிய வேண்டும் என்பதை உங்களது விருப்பத்துக்கேற்ப குறைத்து வைக்க முடியும். மேலும் ஏற்றுக்கொள்ளப்படாத வாடிக்கையாளர்கள் உங்களது சுயவிபரத்தை பயன்படுத்துவதை நிறுத்திவைக்க வைக்க முடியும்.
 
இதன்மூலம் Login செய்துள்ளவர்கள் மட்டுமே உங்களுக்கு comment பண்ண முடியும். மேலும் பெயர் உள்ளவர்கள் மட்டுமே உங்களக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்ற நோக்கம் உங்களிடம் இருந்தால் மற்றவர்களை block செய்ய முடியும். இதனால் பெயரற்றவர்கள் மீண்டும் உங்களுக்கு செய்தி அனுப்ப முடியாது.
 
இந்த சராஹா போன்ற வசதிகளை வழங்கும் பல்வேறு செயலிகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. எனினும் இவற்றில் இக் யாக், சீக்ரெட் மற்றும் விஸ்பர் போன்ற செயலிகள் பிரபலமானதாக அறியப்படுகின்றது. இதுவரை கூகுள் பிளே ஸ்டோரில் மட்டும் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் சராஹா செயலியை தரவிறக்கம் செய்துள்ளனர் என்று அறியப்படுகிறது. இந்த தரவிறக்க வேகம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்தவண்ணமே உள்ளது. 
 
சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு