ஆப்கானில் 29 பேரை பலியெடுத்த குண்டு தாக்குதல்: இலங்கை கண்டனம்

58shares

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கை அரசாங்கம் தாக்குதல் குறித்து கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள அரசாங்கம், இந்த தாக்குதலில், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலில் ஊடகவியலாளர் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.00 மணிக்கு முதலாவது குண்டு வெடித்துள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?