யாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் மனித எலும்புக்கூடு!

  • Shan
  • September 12, 2018
279shares

யாழ்ப்பாணம் காங்கேசன் துறைப் பகுதியில் இன்று காலை எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன் துறைப் பகுதியிலுள்ள தொடருந்துத் தடத்திலிருந்து ஐம்பது மீட்டர் தொலைவிலேயே இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த எலும்புக்கூடு ஆண் ஒருவருடையது என பொலிஸாரால் கூறப்பட்டுள்ள அதே நேரம் நான்கு மாதங்களைக் கடந்ததாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் எமது செய்திப்பிரிவு காங்கேசன் துறைப் பொலிஸ் நிலையத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த எலும்புக்கூடு தொடர்பில் தம்மிடம் மேலதிக தகவல்கள் இல்லை எனவும் பிற்பகல் இரண்டு மணிக்கு நீதவான் குறித்த இடத்திற்கு வருகைதந்தபின்னரே மேலதிக தகவல்கள் தொடர்பில் தெரியவரும் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
பெரும்பான்மை இல்லாத நிலையில் எதற்காக அரசாங்கத்தில் இருக்க வேண்டும்; மஹிந்தவின் சகா அதிரடி!

பெரும்பான்மை இல்லாத நிலையில் எதற்காக அரசாங்கத்தில் இருக்க வேண்டும்; மஹிந்தவின் சகா அதிரடி!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

யாழில் தாக்கத்தை ஏற்படுத்திய கஜா புயலின் தற்போதைய நிலை!

யாழில் தாக்கத்தை ஏற்படுத்திய கஜா புயலின் தற்போதைய நிலை!