ஐ.நா வில் ஸ்ரீலங்காவிற்கு கிடைத்துள்ள மிகச் சிறந்த அங்கீகாரம்!

37shares

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது அரச தலைவர்களுக்கான உயர் மட்டக் கூட்டத்தில் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளமையை இலங்கைக்கு சர்வதேசத்திடமிருந்து கிடைத்துள்ள மிகச் சிறந்த அங்கீகாரமாக நாம் காண்கின்றோமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார்.

அத்துடன் அரச தலைவர்களுக்கான முதல் நாள் கூட்டத்தில் ஜனாதிபதி சிங்களத்தில் உரையாற்றுவாரென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜெனீவா விஜயத்தின் போது பல நாட்டின் அரச தலைவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியிருப்பதுடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் தலைமையில்

ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் போதைவஸ்து தொடர்பான சவாலை சர்வதேச மட்டத்தில் முறியடிப்பது தொடர்பிலான பயிற்சிபட்டறையிலும் கலந்துகொள்வார்.

அத்துடன் 24 ஆம் திகதி நெல்சன் மண்டேலாவின் நினைவு தினத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து சிறப்புரையாற்றவுள்ளார்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

"ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் அரச தலைவர்களுக்கான உயர் மட்ட மாநாடு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது. இதில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடிய மிக விசேடமான முதல் நாளன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இது இலங்கைக்கு மிகவும் சாதகமானதொரு விடயம் என்பதுடன் இது இலங்கைக்கு சர்வதேசத்திடமிருந்து கிடைத்துள்ள மிகச் சிறந்த பிரதிபலிப்பாகவே நாம் கருதுகின்றோம்," என்றும் அமைச்சர் இதன்போது கூறினார்.

ஜெனிவாவில் ஜனாதிபதி, இலங்கையில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திகள், நல்லிணக்கச் செயற்பாடுகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் விளக்கமளிப்பாரென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் செயலாளர் நாயகம் ஹூசைன் ஏற்கனவே இலங்கைக்கு நேரில் வந்து ஜனாதிபதியை சந்தித்திருப்பதனால், ஜெனீவாவில் அவருடன் நல்லெண்ணப் பேச்சுவார்த்தையை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் சமரசிங்க கூறினார்.

இலங்கை போதைப் பொருள் விவகாரத்தில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது. எதிர்காலத்தில் இதுதொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச நாடுகளுடனான தொடர்பு எமக்கு பெரும் சக்தியாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
பெரும்பான்மை இல்லாத நிலையில் எதற்காக அரசாங்கத்தில் இருக்க வேண்டும்; மஹிந்தவின் சகா அதிரடி!

பெரும்பான்மை இல்லாத நிலையில் எதற்காக அரசாங்கத்தில் இருக்க வேண்டும்; மஹிந்தவின் சகா அதிரடி!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

மைத்திரியின் திடீர் அந்தர் வெல்டி; அதிர்ச்சியில் ரணில்; இலங்கை அரசியலில் தொடர் பரபரப்பு!

மைத்திரியின் திடீர் அந்தர் வெல்டி; அதிர்ச்சியில் ரணில்; இலங்கை அரசியலில் தொடர் பரபரப்பு!