இலங்கையின் கிழக்கில் 35 ஆயுதங்களை மறைத்துவைத்துள்ள பிரமுகர்: சிறைக்கைதி வெளியிட்ட திடுக்கிடும் தகவலால் பரபரப்பு!

680shares

சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதம் இருக்கும் ஆயுததாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் இலங்கையின் பாதுகாப்பு தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறைக்கைதி ஒருவர் உண்ணாவிரதம் இருந்துள்ளார். குறித்த கைதி ஏன் உண்ணாவரதம் இருந்தார்? அந்தக்கைதி யார்? போன்றவற்றை எமது செய்திப்பிரிவு ஆராய்ந்தபோது பல திடுக்கிடும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

அண்மையில் இரண்டு மதக் குழுக்களுக்கு இடையிலான முரண்பாடு காரணமாக காத்தான்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முகமட் ஹூசைன் என்ற நபரை கொக்கட்டிச்சோலை தமிழ் பிரதேசத்தில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர். தற்போது அவர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் அடைத்துவைக்கப்பட்டுள்ளார்

அவர் அண்மையில் சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதம் இருப்பதhக தகவல்கள் கசிந்திருந்தது. அத்துடன் அண்மையில் சிறைச்சாலைக்கு மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதியும் உள்ளே ஒருவர் சாப்பிடாமல் சாகக் கிடக்கிரான் என்று கூறியிருந்த நிலையில் அது குறித்து ஆராய்ந்தபோது பின்வரும் தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளது.

தன்னை கைது செய்த பொலீசாரிடம் காத்தான்குடியில் உள்ள ஒரு அரசியல் வாதியிடம் 35 ஏ.கே 47 வகையைச் சேர்ந்த துப்பாக்கிகள் உண்டு அவரை கைது செய்து விசாரணை செய்யுமாறு கூறியும் பொலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காது தன்னை மட்டும் அடைத்து வைத்துள்ளதாக கோரியே அவர் உணவு உண்ண மறுத்து வந்ததாக தெரியவந்துள்ளது.

அப்படியானால் யார் அந்த அரசியல்வாதி? அவரிடம் துப்பாக்கி இருக்குமானால் அது குறித்து பொலிசார் விசாரணை நடத்தாதது ஏன்?

புதிய காத்தான்குடி 5, கர்பலா வீதி, அலியார் சந்தியிலுள்ள அவர் நடாத்தி வந்த தேநீர்க் கடையில் இருக்கும்போது அங்கு வந்த இனந்தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்கள்.

பழனிபாவா என்று அழைக்கப்படும் 73 வயதுடைய ஆதம்பாவா முஹம்மத் இஸ்மாயில் என்பவரே இந்தத் துப்பாகிச் சூட்டில் பலியாகியிருந்தார்

குறித்த துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரில் இந்த முகமட் ஹூசைன் என்ற கைதியும் ஒருவர்.

இவர் கூறியுள்ள தகவல்களின் படி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய பொலீசார் மற்றும் புலனாய்வுதுறையினர் அது குறித்து கவனம் செலுத்தாதது ஏன்? இதே தமிழர்களின் பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் நடந்திருந்தால் துருவி துருவி விசாரணைகளை செய்யும் பாதுகாப்பு தரப்பும் நீதித்துறையும் இந்த விடயத்தில் பின்நிற்பது ஏன்?

இதில் தலையிட்டால் நீதிபதியையும் பொலீஸ் அதிகாரிகளையும் மாற்றி விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவா?அவரது வாக்குமூலம் குறித்து நீதித்துறை கவனம் செலுத்தவில்லை என்ற கேள்விகளை பொதுமக்கள் எழுப்பியுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

இலங்கை விமான நிலையத்தில் தலை தெறிக்க ஓடிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்; காரணம் இதுதான்!

இலங்கை விமான நிலையத்தில் தலை தெறிக்க ஓடிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்; காரணம் இதுதான்!