பழங்குடியினரிடையே ஏற்பட்ட விரக்தியால் தலைவர் எடுத்துள்ள தீர்மானம்!

49shares
Image

இனிவரும் காலங்களில் உலக பழங்குடியினர் தினத்தை தாம் கொண்டாடப் போவதில்லை என இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவர் விஸ்வகீர்த்தி வனஸ்பதி வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிகழ்வுகளுக்கு செலவாகும் நிதியை தமது ஆதிவாசி கிராமத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமன, கொட்டபக்கினிய கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட அரச நிகழ்வில் பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

13 கூட்டங்களை நடத்தி, ஆதிவாசிகளின் பிரச்சினைகள் தொடர்பான மனுவை அரசாங்கத்திடம் கையளித்தோம். எனினும் பல ஆதிவாசிகளின் கிராமங்களது பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

எனவே, இனிவரும் காலங்களில் ஆதிவாசிகள் தினத்தை கொண்டாடப் போவதில்லை. அதற்கு பதிலாக அந்த பணத்தில் கிராமத்தின் பிரதான பிரச்சினைகள் மற்றும் கல்வியை மேம்படுத்த செலவிட நான் தீர்மானித்துள்ளேன்.

ஆறு வருடங்கள் செல்லும் போது ஆறு ஆதிவாசி கிராமங்களின் பிரச்சினைகளைத் தீர்க்கலாம். எங்களது பரம்பரை கலாசாரத்தை பாதுகாக்க வேண்டுமாயின் எமது ஆதிவாசி குடிகளின் பட்டினியைப் போக்க வேண்டும்.

அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அரசாங்கம் கூடிய பங்களிப்பை வழங்க வேண்டியது மிகவும் முக்கியம் என வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கை வரலாற்றில் பழங்குடி சமுதாயத்தில் இருந்து ஒரு பெண் முதன் முதலாக உள்ளாட்சி தேர்தலில் பிரதிநிதியாகத் தெரிவு செய்யபட்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கையின் அதிபராக பிரேமதாச இருந்த போது இப் பழங்குடியினருக்கு இலங்கை குடியுரிமையும் வழங்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையைச் சூழ்ந்துள்ள சிவப்பு வளையம்! அவசர எச்சரிக்கை!!

இலங்கையைச் சூழ்ந்துள்ள சிவப்பு வளையம்! அவசர எச்சரிக்கை!!

கொழும்பை அதிரவைத்த தமிழ்ப் பெண்ணின் சாவு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

கொழும்பை அதிரவைத்த தமிழ்ப் பெண்ணின் சாவு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

தமிழ் பெண்னின் தாலியைத் திருடினார் வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!(வீடியோ)

தமிழ் பெண்னின் தாலியைத் திருடினார் வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!(வீடியோ)