இலங்கையில் வரலாறுகாணாத நெருக்கடி; பதகளிக்கும் மக்கள்; திரிசங்கு போல திணறுகிறது அரசாங்கம்!

  • Shan
  • August 10, 2018
53shares

இலங்கையில் முடங்கிப்போயுள்ள தொடருந்துச் சேவையின் காரணமாக நாட்டின் முக்கியமான இடங்களில் போக்குவரத்து நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளதாக அவதானிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தினந்தோறும் கொழும்பு உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு லட்சக்கணக்கில் பல்வேறு தேவைகளின் நிமித்தம் பயணிப்போர் மிகப்பெரிய நெருக்கடி நிலைமைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக தொடருந்துச் சேவை இடம்பெறும் நாட்களில்கூட கொழும்புக்கு பணிபுரிவதற்காக வருவோர் தினந்தோறும் காலையில் மிகுந்த நெருக்கமாகவே தொடருந்தில் பயணிக்கின்றனர்.

தற்பொழுது தொடருந்துச் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதால் பேருந்துக்களை நம்பியே இவர்களது பயணம் அமைந்துள்ளது.

அலுவலக வேலைகளின் நிமித்தம் பயணிப்போர் ஒரே நேரத்தில் செல்வதனால் தற்பொழுது பேருந்துக்களில் மிகப்பெரிய நெருக்கடி நிலைகளை சந்தித்துவருகின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்டு இலங்கை போக்குவரத்துச் சபை மேலதிக பேருந்துக்களைக்கூட சேவையில் ஈடுபடுத்தியிருந்தாலும் இந்த நெருக்கடி நிலைமை கட்டுக்குள் அடங்கவில்லை.

அதேவேளை இராணுவத்தினரின் பேருந்துக்களைச் சேவையில் ஈடுபடுத்தியும் இந்தப் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் அடங்கவில்லை.

இந்த நிலையில் தனியார் பேருந்துகளின் சேவைகளையும் இந்த நெருக்கடி நிறைந்த நேரத்தில் பெருக்குவதற்காக அரசாங்கம் திறந்த போக்குவரத்துக் கொள்கை ஒன்றை அமுல்படுத்தியிருக்கின்றது.

அதாவது வீதி அனுமதிப் பத்திரம் இல்லாத தனியார் பேருந்துக்கள்கூட தற்போதைய சூழ் நிலையில் சேவையில் ஈடுபடமுடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளின்படி வீதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் எந்தவொரு தனியார் பேருந்தும் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுவது தண்டத்துக்குரிய குற்றமாகக் காணப்படும் நிலையில் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பானது நாட்டில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து அவசர நிலைமையினையே உணர்த்துவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தொடருந்துச் சாரதிகளுக்கு சகல கொடுப்பனவுகளும் உட்பட மாதாந்தம் நான்கு லட்சம் வருமானம் கிடைப்பதாகத் தெரிவிக்கும் போக்குவரத்துப் பிரதியமைச்சர் அபயசிங்க தொடருந்துப் பணியாளர்களின் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் மிகவும் அநீதியானதென குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் தினந்தோறும் நெருக்கடியான நிலைமைகளைக் கடந்ததாகவே இலங்கையின் உள்ளூர் பயணிகளின் வாழ்வு கழிவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழை சேர்ந்த இளைஞனுக்கு ஏ-9 வீதியில் நேர்ந்த கோரம்; அதிர்ச்சியில் உறவினர்கள்! வீடியோ.

யாழை சேர்ந்த இளைஞனுக்கு ஏ-9 வீதியில் நேர்ந்த கோரம்; அதிர்ச்சியில் உறவினர்கள்! வீடியோ.

வவுனியாவில் கணவரை தேடியலைந்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

வவுனியாவில் கணவரை தேடியலைந்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

இலங்கையில் மாற்று திறனாளிகளை அவமதித்து பாரதிராஜாவின் படத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பார்வையாளர்கள்?

இலங்கையில் மாற்று திறனாளிகளை அவமதித்து பாரதிராஜாவின் படத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பார்வையாளர்கள்?