சம்மந்தனின் பதவி காப்பாற்றப்பட்டது எப்படி? நாடாளுமன்றில் அதிரடி அறிவிப்பு!

51shares

ஸ்ரீ லங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்மந்தன் இருப்பதை மாற்றியமைக்க முடியாதென சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை சபையின் நாயகர் கரு ஜயசூரிய விடுத்தார்.

அரசியல் அமைப்பு அல்லது பாரம்பரிய நடைமுறைக்கு அமைவாக எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் வேறொரு நபரை நியமிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், பிரித்தானிய பாரம்பரியம் அல்லது உலகில் ஏனைய சம்பிரதாயத்திற்கமைவாக இதனை செய்யமுடியாதென்றும் சுட்டிகாட்டியுள்ளார்.

பாராளுமன்ற விவாதத்திற்கு நேர ஒதுக்கீடு செய்யும் பொழுதும் நாடாளுமன்ற தெரிவிக்குழு சந்தர்ப்பத்தில் கூட்டு எதிர்கட்சிக்கு தற்பொழுது வழங்கப்படும் நேர ஒதுக்கீடு மற்றும் அதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சி சமீபத்தில் சபாநாயகரிடம் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் ஈடுபடுத்துமாறு தெரிவித்திருந்தது.

இதனால் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவராகவுள்ள இரா.சம்மந்தனின் பதவி பறிபோகும் அபாய நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையைச் சூழ்ந்துள்ள சிவப்பு வளையம்! அவசர எச்சரிக்கை!!

இலங்கையைச் சூழ்ந்துள்ள சிவப்பு வளையம்! அவசர எச்சரிக்கை!!

கொழும்பை அதிரவைத்த தமிழ்ப் பெண்ணின் சாவு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

கொழும்பை அதிரவைத்த தமிழ்ப் பெண்ணின் சாவு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

தமிழ் பெண்னின் தாலியைத் திருடினார் வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!(வீடியோ)

தமிழ் பெண்னின் தாலியைத் திருடினார் வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!(வீடியோ)