வெள்ளை உடையில் திடீரென தோன்றிய அந்தப் பெண் யார்? கண் கலங்க வைத்த காட்சி!

  • Shan
  • August 10, 2018
283shares

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், கலைஞர் கருணாநிதியின் இறுதிச் சடங்கின்போது வெள்ளை நிற உடை ஒன்றுடன் பெண் ஒருவர் முன்னின்று செயற்பட்டதை அவதானித்திருப்பீர்கள்.

குறித்த பெண் யார்? இவருக்கும் கலைஞர் குடும்பத்துக்கும் என்ன தொடர்பு? கருணாநிதியின் இன்னொரு மகளா? போன்ற பல கேள்விகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

யார் அவர்?

அவர்தான் அமுதா ஐ,ஏ.எஸ், கருணா நிதியின் இறுதிச் சடங்குப் பணிகள் அனைத்தையும் முன்னின்று நடத்தி உள்ளார். கருணாநிதி ஆட்சியின் போது துணை ஆட்சியராக பணி உயர்வு பெற்ற இவர் தலைமயில்தான் இறுதி ஊர்வல பணிகள் நடந்தது. மிக பெரிய அனுபவம் கொண்டவர் என கூறப்பட்டுள்ளது.

சென்னையில் வெள்ளம் வந்த போது இவர் செய்த பணிகளுக்காக பெரிய பாராட்டு கிடைத்ததுடன் ஆட்சியராக பணி உயர்வு பெற்றார்.

பல புகழுக்குச் சொந்தமான இவர் செங்கல்பட்டில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றியவர் என்பதுடன் தாம்பரம் மணிமங்கலத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்டு பாராட்டுகளை பெற்று முதல் பெண் தொழிலாளர் நல ஆனையர் என்ற பெருமையைப் பெற்றார்.

கருணாநிதியின் உடல் அடக்கம் தொடர்பில் 11 மணிக்குத்தான் இவருக்கு முறையாக எங்கு இறுதி சடங்கு நடக்கும் என்று அறிவிப்பு கிடைத்தது. அதன்பின்னர் துரிதமாக தனக்கான பணிகளை விரைந்து நடத்தினார்.

குறிப்பாக ஊர்வலத்திற்கான இராணுவம் பொலிஸ் ஆகியோரின் பணிகள் தொடர்பில் மிக வேகமாக செயலாற்றத்தொடங்கினார்.

கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் பூ தூவி அஞ்சலித்தபின்னர் ஒரு அரச மேலதிகாரியாகவுள்ள அமுதாவும் கனத்த மனத்துடன் அஞ்சலி செலுத்திய காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்ததாக தமிழகத் தகவல்கள் கூறுகின்றன.

இதையும் தவறாமல் படிங்க
யாழை சேர்ந்த இளைஞனுக்கு ஏ-9 வீதியில் நேர்ந்த கோரம்; அதிர்ச்சியில் உறவினர்கள்! வீடியோ.

யாழை சேர்ந்த இளைஞனுக்கு ஏ-9 வீதியில் நேர்ந்த கோரம்; அதிர்ச்சியில் உறவினர்கள்! வீடியோ.

வவுனியாவில் கணவரை தேடியலைந்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

வவுனியாவில் கணவரை தேடியலைந்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

இலங்கையில் மாற்று திறனாளிகளை அவமதித்து பாரதிராஜாவின் படத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பார்வையாளர்கள்?

இலங்கையில் மாற்று திறனாளிகளை அவமதித்து பாரதிராஜாவின் படத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பார்வையாளர்கள்?