தூக்கில் தூக்கியே தீருவேன்: ஆவேசத்தில் கொதித்த மைத்திரி!

184shares

சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு ஐரோப்பிய சங்கம் உள்ளிட்ட உள்நாட்டு, சர்வதேச அமைப்புக்களினதும் உலகின் முன்னணி மனித உரிமை அமைப்புக்களினதும் கடும் எதிர்ப்புக்களையும் மீறி மரண தண்டனையை நிறைவேற்றியே தீருவேன் என சிறிலங்கா அரச தலைவர் மீண்டும் சூளுரைத்திருக்கின்றார்.

மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அறிக்கைகள் அடுத்தவாரம் தனது கைகளுக்கு கிடைக்கும் என்றும் கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் கீழ் உள்ள ஆயுர்வேத ஔடதங்கள் கூட்டுத்தாபனமும் சிறிலங்கா இராணுவமும் இணைந்து நடாத்திய ஒரு இலட்சம் மூலிகை கன்றுகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித் திட்டம் இன்று முற்பகல் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

“புத்தெழுச்சி – 60 நாள் செயற்திட்டம்” எனப் பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைச் செடி வகைகளை இராணுவ முகாம்களில் முதலில் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆயுர்வேத ஔடதங்கள் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. பேண்தகு அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் ஒரு நடவடிக்கையாக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்த அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன, முதலாவது மூலிகை கன்றை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவுக்கு வழங்கி வைத்துடன், விகாரமகாதேவி பூங்காவில் சந்தன மரக்கன்றொன்றையும் நாட்டி வைத்தார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆயுர்வேத ஔடதங்கள் கூட்டுத் தாபனத்தின் தலைவர் லால் சமரசிங்க, இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத்தின் விவசாயப் பணிப்பாளர் பிரிகேடியர் புவனக்க குணரத்ன உள்ளிட்ட இராணுவ உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்த இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான சட்ட அனுமதி சட்டமா அதிபர் நீதி அமைச்சம் மற்றம் மரண தண்டனை விதித்த நீதிபதி ஆகியோரின் அறிக்கைகள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு கருத்துத் தெரிவித்த மைத்திரி,

“ போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் வன அழிப்பை தடுத்து வனங்களை பாதுகாக்கும் செயற்திட்டங்களை ஒரு யுத்தத்தைப் போல் முன்னெடுக்கத் திட்டமிட்டிருக்கின்றோம். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி செய்ததை என்னால் செய்ய முடியாது. ஆனால் அந்த நடவடிக்கைகளை சடடபூர்வமாக மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன்.

இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேற்றும் கலந்துரையாடினேன். போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள மரண தண்டனைத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு என்கு மூன்று தரப்புக்களிடம் இருந்து அறிக்கைகள் கிடைக்கப்பெற வேண்டும். சட்டமா அதிபரின் அறிக்கை, நீதி அமைச்சரின் அறிக்கை மற்றும் மரண தண்டனை விதித்த நீதிபதியின் அறிக்கையே அவை.

நீதிபதிகளின் அறிக்கைகள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுவிட்டன. ஏனைய இரண்டு அறிக்கைகளும் அடுத்தவாரம் கிடைத்துவிடும். அதனால் புத்தெழுச்சியை ஏற்படுத்துவதற்கு இவற்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.” என்றார்.

எவ்வாறாயினும் புத்தெழுச்சிக்காக மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா மற்றும் கனடா ஆகிய நாடுகளும், சிறிலங்காவின் மனித உரிமை ஆணைக்குழுவும் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

எனினும் கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு அதி மேற்றுராணியாரான கர்தினால் மெல்கம் ரஞ்சித்தும், சிங்கள பௌத்த மக்களின் அதிஉயர் மதத் தலைமை பீடங்களான அஸ்கிரி – மல்வது பீடங்களும் சிறிலங்கா அரச தலைவருக்கு முழுமையான ஆதரவை வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையைச் சூழ்ந்துள்ள சிவப்பு வளையம்! அவசர எச்சரிக்கை!!

இலங்கையைச் சூழ்ந்துள்ள சிவப்பு வளையம்! அவசர எச்சரிக்கை!!

கொழும்பை அதிரவைத்த தமிழ்ப் பெண்ணின் சாவு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

கொழும்பை அதிரவைத்த தமிழ்ப் பெண்ணின் சாவு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

தமிழ் பெண்னின் தாலியைத் திருடினார் வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!(வீடியோ)

தமிழ் பெண்னின் தாலியைத் திருடினார் வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!(வீடியோ)