நுண்கடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மற்றும் மன்னாரில் ஆர்ப்பாட்டம்

37shares
Image

நுண்கடன் நிறுவனங்களுக்கு எதிராக மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னாரில் மாவட்டத்தில் உள்ள பேரூந்துநிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.

நுண்கடன் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டங்களை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.

இந்த போராட்டத்தில் நுண்கடன் நிறுவனங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் கலந்துகொண்டு நேரடியாக தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை நுண்நிதிக் கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர் நோக்கும் சமூகங்களை பாதுகாப்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தத்தை கொடுக்கும் முகமாக வவுனியா மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களினால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கடை வழியினூடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்தனர்.

பின்னர் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈபட்ட அவர்கள் மாவட்ட செயலகத்திற்கு சென்று மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் ஆளுனரிற்கும், அரசாங்க அதிபருக்குமான மகஜரொன்றினையும் கையளித்தனர்.

இதன் போது, வட்டிக்கு வட்டி இரத்து செய்து வாழவிடுங்கள், ஏழைகளின் உணர்வை புரிந்து கொள், பெண்களிற்கு கடன் திட்டமா தற்கொலைக்கு திட்டமா, நாங்களும்இ மனிதர்களே மரியாதையுடன் அனுகுங்கள், நுண்நிதி கடன் சுமை குடும்பங்கள் சீரழிவு பேன்ற பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?