அமல் கருணாசேகரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

33shares
Image

“த நேசன்” பத்திரிகையின் ஊடகவியலாளரான கீத் நோயர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான அமல் கருணாசேகரவுக்கான விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கல்கிஸை நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி ஊடகவியலாளர் கீத் நோயர் தெஹிவளை பகுதியில் வைத்து கடத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்னர் தனது உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை அடுத்து கீத் நோயார் தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியேறியிருந்தார்.

“த நேசன்” பத்திரிகையின் இணை ஆசிரியரான கீத் நோயார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் உட்பட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டார்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கடந்த 2006 தொடக்கம் 2009ஆம் ஆண்டுகாலகட்டத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமைபுரிந்திருந்தார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே 26 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?