மாந்தை மேற்கு பிரதேச சபை ஆளும் கட்சி உறுப்பினர்களின் அடாவடியான செயல்; அச்சத்தில் அரச அதிகாரிகள்!

8shares
Image

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற சில அதிகாரிகளையும், ஒரு சில கிராம அலுவலகர்களையும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சிலர் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (11.06.2018) காலை 11 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரனின் ஒருங்கிணைப்பில், மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,கே.கே.மஸ்தான் ஆகியோரது இணைத்தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாண முதலமைச்சரின் பிரதி நிதியாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், மாகாண சபை உறுப்பினர் அலிக்கான சரீப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் சிலர் தெரிவித்ததாவது.,

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற சில அதிகாரிகளையும், ஒரு சில கிராம அலுவலகர்களையும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஆளும் தரப்பு புதிய உறுப்பினர்கள் சிலர் எங்களை தூக்குவோம் என்றும் இடமாற்றம் செய்வோம் என்றும் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவருகின்றனர்.

இப்பிரதேசத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சிலர் பிரதேச செயலாளர் போன்று செயற்படுவதோடு தவறான முறையில் காணிகளையும் மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமது சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக செய்படுகின்ற அதிகாரிகளுக்கு எதிராக குறித்த சில ஆளும் தரப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் செயற்படுகின்றனர்.

எனவே எங்களை அச்சுறுத்தும் உறுப்பினர்களிடம் 'பெக்கோ' (jcb) இயந்திரமா இருக்கின்றது??? எங்களை தூக்குவதற்கு என சில அதிகாரிகள் கேள்வி எழுப்பியதோடு,எதிர்வரும் காலங்களில் இவ்வாறு செயற்பட அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?