மரம் வெட்ட சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

20shares
Image

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் மரம் வெட்ட சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் குறித்த மரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று (11.06.2018) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிரேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தை சேர்ந்த மாரிமுத்து திருகேதிஷ்வரன் (வயது 40) மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தோட்ட நிர்வாகத்தினால் செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் தோட்ட நிர்வாகத்திற்கு மரங்களை வெட்டிக்கொடுக்கும் இவர், வழமை போன்று இன்றும் மரங்களை வெட்டிக்கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத நிலையில் வெட்டப்பட்ட மரம் அவரின் மீது விழுந்துள்ளது.

மரத்தில் சிக்கிய இவரை ஏனையவர்கள் மீட்டு உடனடியாக லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரதே பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
அதிவிசேட செய்தி: மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கை; அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

அதிவிசேட செய்தி: மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கை; அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி; தற்போதைய நிலவரம் என்ன?

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி; தற்போதைய நிலவரம் என்ன?

விசேட செய்தி: யாழ்ப்பாண மக்களுக்கான சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்!

விசேட செய்தி: யாழ்ப்பாண மக்களுக்கான சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்!