யாழ். மீனவர்களின் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற மாவை சேனாதிராஜாவுக்கு நேர்ந்த சங்கடம்!

32shares

தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற இயலாதவர்கள், அது குறித்து நாடாளுமன்றில் பேச இயலாதவர்கள் மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளதேவையில்லை, எனக்கூறி நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா மீனவர்களால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

யாழ். வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி இன்று யாழ்.நகரில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் ஆரம்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா

கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது மக்கள் போராட்டத்தில் அரசியல்வாதிகள் வேண்டாம் எனவும், தென்பகுதி மீனவர்களை எமது மண்ணிலிருந்து வெளியேற்ற இயலாதவர்கள், தென்பகுதி மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து நாடாளுமன்றில் ஒரு வார்த்தை கூட பேச இயலாதவர்கள் மக்கள் போராட்டங்களின் கலந்து கொள்ள கூடாது. ஆனாலும் இவர்கள் கலந்து கொள்வது தங்களுடைய அரசியல் லாபங்களுக்காகவே என கோஷமிட்ட மீனவர்கள், அடுத்த மாகாணசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தலுக்காக மக்களுடைய போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் எனவும் கோஷமிட்டனர்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா வெளியேறி சென்றுவிட்டார், இதன் பின்னரும் அரசியல்வாதிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள தேவையில்லை, எனவும் அவர்கள் தங்களால் முடிந்ததை செய்யவேண்டும் எனவும் மீனவர்கள் கூறிவந்தார்கள் ஆயினும் சில அரசியல்வாதிகள்

போராட்டத்தில் தொடர்ந்தும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
போதநாயகி வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா? பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள கடைசி வரிகள்!!

போதநாயகி வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா? பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள கடைசி வரிகள்!!

நாட்டையே உலுக்கிய இளம் பெண் மரணத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

நாட்டையே உலுக்கிய இளம் பெண் மரணத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!