இனவெறுப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தும் அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பது நாட்டுக்கே வெட்கம் - நஸீர் அஹமட்

41shares
Image

இனவெறுப்பைக் பகிரங்கமாகப் பிரதிபலிக்கும் ஒருவர் நல்லாட்சி அரசின் அமைச்சராக இருப்பது நாட்டுக்கே வெட்கக் கேடானது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

விரிவுரையாளர்களுக்கு பாலியல் இலஞ்சம் கொடுத்தே தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் சித்தியடைகிறார்கள் என அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபித்ததை, இந்த நாட்டின் சகவாழ்வை விரும்பும் ஒரு பிரஜை என்ற ரீதியில் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விஜயதாஸ ராஜபக்ஷவின் அறிவீனமானதும் அடிப்படையற்றதுமான கருத்து, தென் கிழக்குப் பல்கலைக்கழக கல்விச் சமூகத்திற்கு மட்டுமல்ல இந்த நாட்டின் ஒட்டுமொத்த பெண் குலத்திற்குமே இழுக்காகும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறைந்த பெருந் தலைவரும் சிந்தனைச் சிற்பியுமான அஷ்ரப் அவர்களின் தூரநோக்கு சிந்தனையில் உருவானதாகும்.

உண்மையில் அது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பிராந்தியத்தில் அமைந்திருந்தாலும் அங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமயங்களைப் பின்பற்றும் சகல இன மாணவர்களும் கல்வி கற்கிறார்கள்.

அதேபோல அனைத்து இன, சமூக, மதங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்களும் அங்கு கற்பிக்கிறார்கள்.

ஆகவே, இனவெறுப்பு வாதியான விஜேதாஸ ராஜபக்ஷவின் கருத்து இந்த நாட்டின் அனைத்து சமூகங்களையும் இழித்துரைப்பதாகவே உள்ளது.

பொறுப்புவாய்ந்த ஒரு அந்தஸ்தில் உள்ள இந்த அரசியல்வாதி பொறுப்புணர்ச்சியற்ற விதத்தில் இழிவாக சிந்திப்பது இந்த நாட்டுக்குப் பொருத்தமானதல்ல, மேலும், நல்லாட்சி அரசாங்கத்தினால் இவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களும் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக உள்ள ஒருத்தர் நாட்டின் உயரிய சபையில் அறிவீனமாக பெண்களை இழிவுபடுத்தியிருப்பது சரித்திரத்தில் இதுவே முதற் தடவையாகும்.

எனவே, நாட்டின் சரித்திரமாகப் பதிவாகியுள்ள இந்த அமைச்சரின் அசிங்கமான அறிக்கையை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் குறித்த அமைச்சரின் கூற்றுக்கு இந்த நாட்டிலுள்ள பெண்கள் உட்பட சகவாழ்வையும் கண்ணியத்தையும் விரும்பும் அனைவரும் உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!