ஸ்ரீலங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட குருநகர் மீனவர்களின் நினைவேந்தல்

14shares
Image

மண்டைதீவுக் கடலில் வைத்து கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட 31 குருநகர் மீனவர்களின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை உறவினர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.

குருநகர் சனசமூக நிலைய முன்றிலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் உறவுகளுக்கு இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிருஸ்தவ வணபிதாஇ யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆனொல்ட் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

1986 ஜூன் மாதம் 10 ஆம் திகதி குருநகர் துறையில் இருந்து தூயஒளி படகு 31 மீனவர்களைச் சுமந்த படி புறப்பட்டது. முகத்துவாரம் வெளிச்சக்கூடு தாண்டி மண்டைதீவுக் கடலில் 27 மீனவர்கள் இறங்கினார்கள். நால்வர் படகில் நின்றனர்.

வலை வளைக்க ஆயத்தமாக மீனவர்கள் தயாராக பலவிதமான ஆயுதங்கள் பொருத்தப்பட்ட சிறியரக கப்பலில் முகமூடியணிந்தபடி வந்திறங்கினர் இலங்கை கடற்படையினர். மீனவர்கள் அனைவரையும் கைகட்டித் தலைகுனிந்து நாரிமுட்டக்கடலில் நிற்கும்படி மிரட்டினார்கள்.

பின்பு கோடரி, வாள், கத்தி தடியாலும் துவக்குப் பிடியாலும் வெட்டியும் கொத்தியும் அடித்தும் 31 பேரையும் கொன்றனர்.

மண்டைதீவு நீலக்கடல் எங்கும் பிணம் மிதந்து சிவப்பாய் மாறியது.

Image0

Image1

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!