அர்ஜுன் அலோசியஸிடமிருந்து மூன்று மில்லியன் ரூபா பணத்தை தேர்தலுக்காக செலவளித்தோம்; ஒப்புக்கொண்ட இராஜாங்க அமைச்சர்!

11shares
Image

மத்திய வங்கி பிணை முறி விற்பனை மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து மூன்று மில்லியன் ரூபா பணத்தை தேர்தலுக்காக செலவளித்ததாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க நேற்று (08.06.2018) ஒப்புக்கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ள விசாரணை அறிக்கையில் இந்தப்பணம் தேர்தல் முடிவடைந்த பின்னரே அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிற்கு கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி விற்பனை மோசடி தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் விசாரணை அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தனர்.

இதில் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிற்கு பேர்பசூல் டெஷரிஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸிடமிருந்து மூன்று மில்லியன் ரூபா பணம் மூன்று தவணையாக கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இந்த பணத்திற்கான காசோலைகளை அமைச்சர் சேனசிங்க அவரது மெய்ப்பாதுகாவலர்களைக் கொண்டு பணமாக மாற்றிக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் (08.06.2018) கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த அமைச்சர் சுஜீவ சேனசிங்க, அலோசியஸிடமிருந்து கிடைத்திருந்த பணத்தை தனது நண்பர்கள், பாதுகாவலர்களை கொண்டு மாற்றிக்கொண்டதாக குறிப்பிட்டார்.

எனினும் இந்தப் பணத்தை மீள கையளிக்குமாறு சபாநாயகரோ அல்லது பொறுப்புவாய்ந்த அதிகாரிகளோ உத்தரவிட்டால் திருப்பிக்கொடுக்கவும் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிற்கு பேர்பசூல் டெஷரிஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டபிள்யூ.எம்.மென்டிஸ் மதுபான தொழிற்சாலை நிறுவனத்தினால் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தல் முடிவடைந்த நிலையிலேயே வழங்கபட்டிருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!