மட்டக்களப்பு - வானவில் விளையாட்டுக் கழகத்தின் இரத்தான நிகழ்வு

8shares
Image

மட்டக்களப்பு - சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகத்தின் 38ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகமும், சித்தாண்டி பொதுமக்களும் இணைந்து நடாத்துகின்ற இரத்ததான நிகழ்வு இன்று சனிக்கிழமை சித்தாண்டி ஸ்ரீ முருகன் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

நடைபெற்ற இரத்தானத்திற்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் வைத்தியர் எஸ்.விவேக் மற்றும் குழுவினர் வருகைதந்திருந்தனர்.

இதன்போது இளைஞர்கள் பெருமளவாக கலந்துகொண்டு, உரிய பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் இரத்ததானம் செய்துகொண்டனர்.

இரத்த தானம் வழங்குவதற்காக சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகமும், சித்தாண்டி பொதுமக்களும் இணைந்து சுமார் 50க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்துதெரிவித்த மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் வைத்தியர் எஸ்.விவேக்,

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இரத்தான ஏற்பாடுகளை இளைஞர்கள் ஏற்பாடு செய்து வழங்கிவருகின்றநடைமுறை பரவலாக இருந்தாலும், இவ்வாறான இரத்த தான நிகழ்வுக்கு பெண்களின் பங்களிப்பு என்பது மிக மிக குறைவானதாகவே காணப்படுகின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இரத்த தானம் வழங்கும் பெண்களின் வீதம் என்பது 5 வீதமாக காணப்படுகின்றவேளை எதிர் காலத்தில் பிறரின் உயிரைக் காப்பாற்றும் இவ்வாறான இரத்த தான நிகழ்வுகளுக்கு பெண்களின் பங்களிப்பு வீதம் அதிகரிக்கப்படவேண்டும், இதன் மூலம் பல நன்மைகளை பெறுவதுடன் தங்களின் உடல் ஆரோக்கியத்தையும் முறையாக பேணமுடியும் எனவும் இதன்போது வைத்தியர் எஸ்.விவேக் தெரிவித்துள்ளார்.

Image0

Image1

Image2

Image3

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!