வவுனியா குழந்தைக் கடத்தல் சம்பவம் - மேலும் 8 பேர் கைது!

22shares

வவுனியாவில் 8 மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தையை இந்தியாவிற்கு கடத்திச் செல்லவும் திட்டமிட்டிருந்தாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

வவுனியா, குட்செட் வீதி, முதலாம் ஒழுங்கையைச் சேர்ந்த 8 மாத ஆண் குழந்தை கடந்த 31 ஆம் திகதி அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸாரின் உதவியுடன் குழந்தை மீட்க்கப்பட்டது.

குறித்த சம்பத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் மற்றும் ஆணொருவர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

வர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியலாயத்தில் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி கோரளகெதர தலைமையிலான 12 பேர் அடங்கிய பொலிஸ் பிரிவினர் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் 8 பேரை நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

இவர்களில் 6 பேர் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவர் முல்லைத்தீவு மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது..

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் பிரகாரம் குழந்தையை கடத்துவதற்காக குழந்தையின் தந்தையார் வவுனியாவை சேர்ந்த நபரினூடாக பணப்பேரம் பேசியதாகவும்

குழந்தையை கடத்தி வைத்திருந்த இரு பெண்களுக்கும் தொண்ணூறாயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனையோருக்கு தலா ஐயாயிரம் ரூபா வழங்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

அத்துடன் குழந்தையை இந்தியாவிற்கு கடத்தி செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளமையும் பொலிஸாரின் விசாணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை வவுனியா நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த வவுனியா பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குழந்தை கடத்தல் சம்பவத்துடன் இதுவரை 13 பேர் கைது செய்ய்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!