இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தை முக்கிய நாட்டிற்கு வழங்கத் திட்டம்?

225shares

அம்பாந்தோட்டை - மத்தள மஹிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கான திட்டம் இருப்பதாக ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியை நேற்றைய தினம் இராஜினாமா செய்த சுரேன் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

மத்தள சர்வதேச விமானத்தை அமைத்தமையினால் எந்தவொரு பயனும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள அவர், இதுவரை எந்தவொரு விமானமும் மத்தளவுக்கு வருகைதரவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற விமான சேவைகள் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு இடையிலான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சுரேன் ரத்வத்த, மத்தள சர்வதேச விமான நிலையம் குறித்து வெளியிட்ட கருத்து மிகவும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் (06.06.2018) சுரேன் ரத்வத்த விலகியிருந்தார்.

எனினும் இராஜினாமா கடிதத்தை வழங்க முன்னர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த அவர், பெரும்பாலும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை இந்திய விமான நிலைய அதிகார சபைக்கு வழங்கப்படலாம் என்றும் ஆருடம் வெளியிட்டார்.

சீன உதவிகளுடன் ஸ்ரீலங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என்பன யாருடைய தேவைகளுக்காக செய்யப்பட்டமை என்பது தமக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இருந்த போதிலும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை ஒரு வெள்ளை யானை என்று கூறலாம் என்று குறிப்பிட்ட சுரேன் ரத்வத்த, இதுவரையான காலப்பகுதி வரையிலும் எந்தவொரு விமானமும் மத்தள விமான நிலையத்திற்கு வருகைதரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு 209 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையத்தின் பணிகளுக்காக சீனாவிலுள்ள எக்ஸிம் வங்கியால் 190 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இதுவரை எந்தவொரு பயணிகள் விமானமும் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைதரவில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் உலகிலேயே மிகப்பெரிய விமானமான என்டனோ 225, கடந்த ஏப்ரல் மாதத்தில் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!