போராட்ட களத்தில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட கஜேந்திரன் - சயந்தன்; வேடிக்கை பார்த்த சுமந்திரன்!

51shares
Image

யாழ் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு இடம்பெற்றிருந்த போராட்டத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் போராட்டக் களத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருந்தது.

இன்றைய (08.06.2018) தினம் இடம்பெற்ற முற்றுகைப் போராட்டத்தில், கலந்துகொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வட பகுதி மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு கொழும்பில் அரசுக்கு முண்டு கொடுத்துக்கொண்டு இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் பொறுப்புக்கூற வேண்டும் என்று குற்றம்சாட்டியதாலேயே இந்த குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிரான செல்வராசா கஜேந்திரனின் குற்றச்சாட்டால் ஆத்திரமடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வடமராட்சி கிழக்கு மீனவர்களின் உரிமைக்கான போராட்டத்தில் சலசலப்பும் ஏற்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் சயந்தன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் குழப்பமடைந்து, செல்வராசா கஜேந்திரனுடன் கடும் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

எனினும் போராட்டத்தில் பங்கேற்றிருந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்த குழப்பத்திற்குள் தலையிடாமல் அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!