தமிழர் தாயகத்தில் 78 பேர் தற்கொலை; வெளியான அதிர்சி காரணம்!

34shares
Image

தமிழர் தாயகமான வட கிழக்கில் நுன்நிதிக் கடன் நிறுவனங்களின் அடாத்தான நடவடிக்கைகள் காரணமாக 2018 ஆம் ஆண்டுக்குள் மாத்திரம் 78 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமுக அமைப்புக்களின் சம்மேளனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதுடன், வடக்கு கிழக்கில் பாரிய சமூகப் பிரச்சனையாக மாறியுள்ள இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வொன்றை மத்திய வங்கியையும் இணைத்துக்கொண்டு நடைமுறைப்படுத்துமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கையும் விடுத்துள்ளது.

போரினால் பேரழிவை சந்தித்த வட கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்வின் பின்னர் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு நுன்நிதிக்கடன்கள் உதவியாக இருந்தாலும் பின்னர் அதனூடாக பல அசெகரியங்களை மக்கள் எதிர்கொள்வதாக கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமுக அமைப்புக்களின் சம்மேளன தலைவர் அன்ரனி கலிஸ்சியஸ் கிளிநொச்சியில் இன்று (08.06.2018) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கவலை வெளியிட்டுள்ளார்.

போருக்குப் பின்னர் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள நுன்நிதிக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களால் போரினால் பேரழிவை சந்தித்து மீள முடியாதிருக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகள் காரணமாக பலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. இதற்கமைய வடமாகாணத்தில் நுன்நிதிக்கடன் செயற்பாடுகளினால் 59 பேரும், கிழக்கு மாகாணத்தில் 19 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமுக அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் அன்ரனி கலிஸ்சியஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நுன்கடன் நிதி நிறுவனங்களின் அடாவடித்தனமான கடனை மீளப்பெறும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக நேற்றைய (07.06.2018) தினம் பாராளுமன்றில் உரையாற்றிய ஸ்ரீலங்கா நிதி அமைச்சர் மங்கள் சமரவீர உறுதியளித்திருந்தார்.

அதேவேளை நுன்கடன் நிதி நிறுவனங்கள் அறிவிடும் வட்டிக்கு 30 வீதம் என்ற உச்சவரம்பொன்றையும் விதிக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் மங்கள சமரவீர அறிவித்திருந்தார். நுண்நிதி நிறுவனங்களின் நிதி பேரங்களில் சிக்கி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஜூன் மாதத்திற்குள் விசேட நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்ரீலங்கா நிதி அமைச்சர் மங்கள் சமரவீர தெரிவித்திருந்தார்.

எனினும் அரசாங்கம் இந்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துமா என்பது சந்தேகமே என்று கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற அமைப்பு, சிவில் சமூக சம்மேளனத்தின் தலைவர் அன்டனி கலீயஸியஸ் தெரிவித்துள்ளார்.

நுண்கடன் நிதி நிறுவனங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினையை முக்கிய பிரச்சனையாக கருத்தில் எடுத்து அதற்கு நிரந்தரத் தீர்வை முன்வைக்க அரசாங்கமும், மத்திய வங்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற அமைப்பு - சிவில் சமூக சம்மேளனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!