யாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பம்

45shares
Image

யாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின்இரண்டாவது பகுதி இன்று காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

சகல பீடங்களையும் சேர்ந்த 1706 பட்டதாரிகள் இம்முறை பட்டம்பெறவுள்ளனர்.

07 அமா்வுகளாக நடைபெறவுள்ள இந்த பட்டமளிப்பு விழாவில் கலை,மருத்துவ, விஞ்ஞான, பொறியியல் மற்றும் பட்டப்பின் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்தஆயிரத்து 223 உள்வாரி பட்டதாரிகளும், 43 டிப்ளோமா தாரிகளும் பட்டம் வழங்கிகௌரவிக்கப்படவுள்ளதோடு, யாழ். பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்விநிலையத்தைச் சேர்ந்த 440 வெளிவாரிபட்டதாரிகளின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.

இம்முறை, இருவா் கலாநிதிப் பட்டங்களையும், 07 பேர் முதுமெய்யியல்மாணிபட்டங்களையும் , வவுனியா வளாகத்தைச் சேர்ந்த 170 போ் முதுகல்விமாணி பட்டங்களையும், 07 போ் சுகாதார முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், 21 பேர் சைவசித்தாந்தத்தில் முதுமாணி பட்டங்களையும் , 11 போ் முதுவியாபாரமாணி பட்டங்களையும் ,04 போ் முகாமைத்துவத்தில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழ்களையும், 95 போ்மருத்துவமாணி சத்திரசிகிச்சைமாணி பட்டங்களையும் , ஒருவா் மருத்துவ விஞ்ஞானமாணிபட்டத்தையும், 31 போ் பொறியியல் விஞ்ஞானமாணி பட்டங்களையும் , 78 போ் விஞ்ஞானமானிசிறப்பு மற்றும் 79 போ் விஞ்ஞானமாணி பொதுப் பட்டங்களையும், 16 பேர் கணினி விஞ்ஞானத்தில்விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டங்களையும், பெறவுள்ளனர்.

08 போ் பிரயோகவிஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டங்களையும், 07 பேர் விவசாய விஞ்ஞானமாணிபட்டங்களையும், 146 போ் நுண்கலைமாணி ( கா்நாடக சங்கீதம், நடனம், சித்திரமும்வடிவமைப்பு) பட்டங்களையும், 459 போ் சிறப்புக் கலைமாணி, 81 போ் பொதுக் கலைமாணிப்பட்டங்களையும் பெறவிருப்பதோடு, 05 போ் விஞ்ஞானத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், 09போ் இதழியலில் தகைமைச் சான்றிதழ்களையும், 16 போ் சந்தைப்படுத்தல்முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், 13 போ் மனிதவள முகாமைத்துவத்தில்தகைமைச் சான்றிதழ்களையும் பெறவிருக்கின்றனா்.

வெளிவாரியாகப் பட்டங்களைப் பெறுகின்ற 374 கலைமாணிப் பட்டதாரிகளினதும், ஒருஇசைமாணிப் பட்டதாரியினதும், 03 நடனமாணி பட்டதாரிகளினதும் 37 வணிகமாணி, 25 வியாபாரமுகாமைத்துவமாணி பட்டதாரிகளினதும் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.

மொத்தமாக இம்முறை ஆயிரத்து 706 பட்டங்கள் வழங்கப்படவிருப்பதோடு, சகல கற்கைநெறிகளுக்குமாக 34 தங்கப் பதக்கங்களும், 48 பரிசில்கள் மற்றும்புலமைப்பரிசில்களும் வழங்கப்படவிருக்கின்றன.

Image0

Image1

Image2

Image3

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!