யாழ் மாவட்ட கடற்தொழில் நீரியல் திணைக்களத்தை முற்றுகையிட்ட வடமராட்சி கிழக்கு மீனவர்கள்

8shares
Image

வடமராட்சி கிழக்கு,மருதங்கேணி பகுதியில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும்கடலட்டை தொழிலை தடை செய்யுமாறு வலியுறுத்தி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இன்று போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்

கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை இந்த போராட்டம்முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்குமருதங்கேணியில் தென்னிலங்கை மீனவர்கள் சிலர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகஅப்பகுதியில் தங்கியிருந்து வாடி அமைத்து கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை முற்றாகதடைசெய்யுமாறு வலியுறுத்தி உள்ளூர் மீனவர்களால் தொடர்ச்சியாக போராட்டங்கள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிர்ப்புதெரிவித்து இன்று யாழ்பபாணம் பண்ணையில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தை உள்ளுர் மீனவர்கள் இன்று காலை 8 மணிக்கு முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக எமதுபிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்

இதனால் நீரியல் வளதிணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அலுவலகத்துக்குள் செல்ல முடியாது தடுக்கப்பட்டுள்ளனர்.

தென்னிலங்கைமீனவர்களின் இந்த செயற்பாட்டை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள்நியாயப்படுத்தியுள்ள நிலையிலேயே உள்ளுர் மீனவர்களால் இந்த போராட்டம்முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தென்னிலங்கை மீனவர்களால் முன்னெடுக்கப்படும் கடலட்டை பிடிக்கும் தொழிலை உடனடியாகதடுத்து நிறுத்தி அவர்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்றுமாறுஆர்பாட்டக்காரர்கள் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளனர்;

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாணசபை உறுப்பினர்சந்திரலிங்கம் சுகிர்தன் உள்ளிட்டவர்களும் இந்த போராட்டத்தில்கலந்துகொண்டுள்ளனர்.

Image0

Image1

Image2

Image3

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!