மருதங்கேணி மீனவர்கள் இன்று காலை போராட்டம்!

  • Shan
  • June 06, 2018
21shares

யாழ் வடமராட்சி மருதங்கேணி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை தடை செய்ய வலியுறுத்தி அப்பகுதி மீனவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

யாழ் வடமராட்சி கிழக்கு மருதன்கேணி பகுதியில்,அப்பகுதியை சாராத வேறு மாவட்ட மீனவர்கள் சிலர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலக கடலட்டை தொழிலில் ஈடுபடுவதாக இப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இதை தடுத்து நிறுத்தி குறித்த மீனவர்களை வெளியேற்றுவதுடன் தமது கடற்பரப்பில் கடலட்டை தொழிலை முற்றாக தடைசெய்யுமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றது.

வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கம் மற்றும் கடற்தொழிலாளர் இணையம் ஆகியன இணைந்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

மருதங்கேணி கடற்கரையில் இன்று காலை இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மருதங்கேணி பிரதேச செயலகம்வரை ஊர்வலமாக சென்றதுடன் ஜனதிபதி பிரதமர் ஆகியோருக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை பிரதேச செயலர் கனகேஸ்வரனிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் உரிய தீர்மனம் எடுக்க தவறும் பட்சத்தில் தமது போராட்டத்தை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இவர்கள் தெரவித்தனர்.

வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், சந்திரலிங்கம் சுகிர்தன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!