ஸ்ரீ லங்காவில் ஐம்பதாயிரம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கத் திட்டம்!

  • Shan
  • June 06, 2018
4shares

ஸ்ரீ லங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான செய்தி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2025ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு மாவட்ட மட்டங்களில் கண்காட்சிகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ இயந்திரத்தையும், கண்டி போதனா வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேனர் இயந்திரத்தையும் துரிதமாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் , 2017 மற்றும் 2018ம் ஆண்டு வரவு செலவு திட்ட யோசனைகளுக்கு அமைவாக அரச மற்றும் தனியார், வெளிநாட்டு நிதி வசதியளிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஏனைய ஒத்துழைப்பு நிறுவனங்களுடன் இணைந்து நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் 'என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா' வட்டி நிவாரண கடன் திட்டத்தினை செயற்படுத்தப்படுகின்றது.

இத்திட்டத்தின் கீழ் 16 திட்டங்களுக்கு சலுகை கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன. அதனடிப்படையில், இதுவரை 12,405 பயனாளிகளுக்கு 30 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தினை மேலும் மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின் ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுடன் இணைந்து அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் 03 மாதங்களுக்கு ஒருமுறை தேசிய மட்டத்தில் கண்காட்சியொன்றை '2025 தூர நோக்கு' என்ற தலைப்பின் கீழ் நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பு செய்வதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சினுள் செயலகம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை துணைப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

என்று அந்த ஊடகத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!