உலகமே எதிர்பார்த்த அந்த நாள் இன்றுதான்; வெற்றியளிக்குமா பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்வாரா கிம் யொங் வுன்?

42shares

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த வடகொரிய தலைவர் கிம் யொங் வுன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் இடம்பெறவுள்ள வரலாற்று ரீதியிலான சந்திப்பு பல இழுபறிகளுக்கு மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (12.06.2018) நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பிற்காக வடகொரிய தலைவர் கிம் யொங் வுன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.062018) பகல் வேளையில் சிங்கப்பூரை சென்றடைந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்மும் அதே நாள் இரவு சிங்கப்பூர் சென்றடைந்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை (12.06.2018), வடகொரிய தலைவர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் இடம்பெறவுள்ள வரலாற்று ரீதியிலான சந்திப்பினை முன்னிட்டே அவர்கள் இந்த விஜயத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று 12 ஆம் திகதி சிங்கப்பூரிலுள்ள சென்தோச தீவில் இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பிற்கான ஆயத்த பணிகள் சிங்கப்பூரில் துரித கதியில் நடைபெற்று முடிந்திருக்கின்றது.

இவர்களின் சந்திப்புக்களை முன்னிட்டு, சிங்கப்பூரில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிகளவிலான பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வடகொரிய தலைவர் கிம் யொங் வுன் குறித்த சந்திப்பிற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூருக்கு முதலாளாக வருகை தந்ததுடன் அன்றைய தினமே சிங்கப்பூர் பிரதமரையும் சந்தித்திருந்தார்.

இதேவேளை, கனடாவில் இடம்பெற்ற ஜி-7 மாநாடுகளை முடித்துக்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரின் இராணுவ விமானதளங்களில் ஒன்றான பயா லெபரில் (paya lebar) இரவு 8.30 மணியளவில் சிங்கப்பூரில் வந்திறங்கி அவரை அந்நாட்டின் அமைச்சரும், தமிழருமான விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

இதனைத்தொடர்ந்து நேற்று (11.06.2018) திங்கட் கிழமை சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் உடனான ஒரு சந்திப்பினை ட்ரம்ப் மேற்கொண்டிருந்தார்.

இந்த சந்திப்பின் போது வடகொரியா தலைவர் தரப்பிலும், அமெரிக்க தலைவர் தரப்பிலும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளது, குறிப்பாக அமெரிக்க அரச தரப்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளது, அதில் முக்கியமானது வடகொரியா அனுயாயுத சோதனையை கைவிட வேண்டும் என்பதே, இந்த கோரிக்கைக்கு வடகொரியா அரச தலைவரின் பதில் இவ்வாறு இருக்கப்போகின்றது என்பதை வரவிருக்கும் மணித்தியாலயங்களில் அறிய முடியும், மொத்தத்தில் இரு அரச தரப்பின் சந்திப்பு வெற்றியளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், குறித்த சந்திப்பு வெற்றியடையும் பட்சத்தில் வடகொரியா அரச தலைவரை அமெரிக்காவுக்கு அழைப்பேன் என அமெரிக்க அரச தலைவர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்க – வடகொரியத் தலைவர்களுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில் உலகின் பல பாகங்களை சேர்ந்த பெருமளவிலான ஊடகவியலாளர்கள் சிங்கப்பூரில் ஒன்று கூடியுள்ளனர்.

சிங்கப்பூரின் F1 pit ( எப் வன் பிட்) கட்டடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ள சர்வதேச ஊடக நிலையத்திலேயே குறித்த ஊடகவியலாளர்கள் ஒன்று கூடியுள்ளனர்.

ட்ரம்ப் – கிம் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாக செய்தியினை சேகரிக்கவும், நேரடி ஒளிபரப்பினை செய்யவும் சுமார் 2500க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் ஒன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் மற்றும் கிம் இடையிலான சந்திப்பிற்கு சுமார் 20 மில்லியன் டொலர்கள் சிங்கப்பூர் அரசால் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
போதநாயகி வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா? பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள கடைசி வரிகள்!!

போதநாயகி வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா? பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள கடைசி வரிகள்!!

நாட்டையே உலுக்கிய இளம் பெண் மரணத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

நாட்டையே உலுக்கிய இளம் பெண் மரணத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!