உள்ளே மோதல்; வெளியில் மச்சான்: அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை துகிலுரித்த அமைச்சர்!

81shares
Image

“நாடாளுமன்றில் எதிர்கட்சி தரப்பிலும், ஆளும் கட்சி தரப்பிலும் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக சண்டைபிடித்துக்கொள்வார்கள், ஆனால் கென்டினுக்கு சென்றால் ஒன்றாக அமர்ந்து சிரித்துக்கொண்டு உணவு உண்பார்கள்”. அதேபோல் நாடாளுன்ற அவைக்குள் கடும் வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி சண்டைபிடித்தவர்கள் வெளியில் வந்ததும் “ மச்சான் பொருட்படுத்த வேண்டாம் என்ற கூறி கட்டி அணைத்துக்கொள்வார்கள்”, ஆனால் கிராமத்தில் உள்ள இந்த அரசியல்வாதிகளது ஆதரவாளர்களோ கைகலப்பில் ஈடுபட்டு, உயிரை மாய்த்துக்கொண்டு, அவையவங்களை இழந்து, நட்பையும் உறவுகளையும் இழந்து, ஒரே கிராமத்தில் சகோதரர்களாக இருந்தவர்கள் அரசியல் காரணமாக இரு துருவங்களாக பிளவுபட்டு இருக்கின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பத்து இலட்சம் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் தேசிய செயற்திட்டத்தின் கீழ் அநுராதபுரம் கலாவெவ தேர்தல் தொகுதியின் இராஜாங்கணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மைத்ரி – ரணில் தலைமையிலான ஸ்ரீலங்காவின் தற்போதைய தேசிய முக்கிய அமைச்சர்களில் ஒருவரான துமிந்த திஸாநாயக்க அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை வெளிச்சம்போட்டுக் காண்பித்திருக்கின்றார்.

அநுராதபுரம் ராஜாங்கணை மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், காணி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக்க, மகளீர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார ஆகியோரும் கலந்துகொண்டிருந்த நிலையில், நீர்ப்பாசன நீரியள் வள மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களுமான நாம் அனைவரும் எந்தவித முரண்பாடும் இன்றி ஒரே மேசையில் அமர்ந்து உணவு அருந்துவதுடன், மிகவும் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்றில் எதிர்கட்சி தரப்பிலும், ஆளும் கட்சி தரப்பிலும் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக சண்டைபிடித்துக்கொண்ட போதிலும், கென்டினுக்கு சென்றால் ஒன்றாக அமர்ந்து சிறித்துக்கொண்டு உணவு உண்பார்கள்” என்றும் அமைச்சர் துமிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக நாடாளுன்ற அவைக்குள் கடும் வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி சண்டைபிடிப்பவர்கள் வெளியில் வந்ததும் “ மச்சான் பொருட்படுத்த வேண்டாம் என்ற கூறி கட்டி அணைத்துக்கொள்வார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கிராமத்தில் உள்ள இந்த அரசியல்வாதிகளது ஆதரவாளர்களோ கைகலப்பில் ஈடுபட்டு, உயிரை மாய்த்துக்கொண்டு, அவையவங்களை இழந்து, நட்பையும் உறவுகளையும் இழந்து, ஒரே கிராமத்தில் சகோதரர்களாக இருந்தவர்கள் அரசியல் காரணமாக இரு துருவங்களாக பிளவுபட்டு இருக்கின்றனர் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளரான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் வாதிகள் ஆளும் கட்சியில் இருந்தாலும், எதிர்கட்சியில் இருந்தாலும் அவர்கள் தமது அரசியலை செய்துகொண்டிருப்பதாக குறிப்பிடும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, மக்களோ அரசியல் காரணமாக திட்டமிட்டு பிரிக்கப்பட்டதற்கு அமைய, இன்னமும் 77 – 78 களில் இருந்தது போல் அரசியல் பழிவாங்கல்களை மனதில் வைத்துக்கொண்டு ஆத்திரத்துடனும், வெறுப்புடனுமே வாழ்ந்து வருவதாக கவலை வெளியிட்டார்.

எவ்வாறாயினும் நாட்டில் புரையோடிப்போயுள்ள இந்த மோசமான அரசியலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கியதாகவும் அமைச்சர் திஸாநாயக்க தெரிவித்தார்.

தேர்தல்களின் போது எமது கட்சிகளுக்குரிய தனித்துவமாக கொள்கைகளை முன்வைத்து கொள்கை ரீதியாக போட்டி போட்டுக்கொண்டு, ஒருவரையொருவர் விமர்சித்துக்கொண்டாலும், நாட்டின் பிரதான பிரச்சனைகளுக்கு இரண்டு கட்சிகளும் இணைந்து தீர்வு காண இன்னமும் நெருக்கமாக செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் ஒரு செயலை செய்யும் போது அதனைவிட சிறப்பாக நாம் செய்திருப்போம் என்று எதிர்கட்சியினர் கூறி ஆட்சியில் உள்ளவர்களை விமர்சிப்பது இந்த நாட்டின் அரசியல் கலாசாரமாக மாறிவிட்டதாகவும் சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, இந்த நிலை தொடர்வதாலேயே நாட்டின் தேசிய பிரச்சனைகளுக்கு இன்னமும் தீர்வு காண முடியாதிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தேசிய பிரச்சனைகளுக்கான தீர்வு காண வேண்டுமானால் குறுகிய அரசியல் இலாபங்களை கருத்தில் கொண்டு அரசியல் ரீதியாக அணுகாமல், நாட்டினதும், மக்களினதும் எதிர்காலம் குறித்து சிந்தித்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் அரசியல் கட்சிகளுக்கு அமைச்சர் துமிந்த திஸாநாயக்க பகிரங்க அழைப்பு விடுத்தார்.

அதேவேளை இந்தப் பணிகளை செவ்வனே நிறைவேற்றவே தேசிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் துமிந்த, அதனால் தேசிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதையும் தவறாமல் படிங்க
அதிவிசேட செய்தி: மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கை; அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

அதிவிசேட செய்தி: மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கை; அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி; தற்போதைய நிலவரம் என்ன?

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி; தற்போதைய நிலவரம் என்ன?

யாழில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிய  கஜா புயல்; நேரடி ரிப்போர்ட் இதோ!

யாழில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிய கஜா புயல்; நேரடி ரிப்போர்ட் இதோ!