கோட்டாபய சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதி? இரகசியமாக நகர்த்தப்படும் காய்கள்

118shares
Image

ஸ்ரீலங்காவின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவார்களானால், அவரை கூட்டு எதிரணியின் வேட்பாளராக நிறுத்துவதில் சிக்கல் இருக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளின் தலைவர்களும், சிங்கள கடும்போக்குவாத தரப்பினரும் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அவர் தலைமையில் அமைத்துள்ள 'வியத்மக' என்ற அமைப்பின் ஊடாக நாடு தழுவிய ரீதியில் கூடடங்களை நடத்தி, நாட்டின் ஆட்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்றும், பொருளாதார மற்றும் வெளிவிவகாரக் கொள்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்றும் தெளிவுபடுத்தி வருகின்றார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தீர்மானித்துள்ளதாலேயே அவர் நேரடியாக இவ்வாறான பிரசாரங்களை மேற்கொண்டுவருவதாக அவரது ஆதரவாளர்களும்இ எதிர் தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும்இ மக்களும் விரும்பினால்இ தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என்றும் கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்தார்.

அதேவேளை கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மஹிந்த அணியில் அங்கம் வகிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரும், அதேபோல் மஹிந்த அணிக்கு ஆதரவு தெரிவித்துவரும் கடும்போக்கு சிங்கள பௌத்த அமைப்புக்களும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச, மக்கள் விரும்பினால் கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவை நிறுத்துவது குறித்து ஆராய முடியும் என்று கூறினார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
அதிவிசேட செய்தி: மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கை; அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

அதிவிசேட செய்தி: மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கை; அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி; தற்போதைய நிலவரம் என்ன?

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி; தற்போதைய நிலவரம் என்ன?

விசேட செய்தி: யாழ்ப்பாண மக்களுக்கான சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்!

விசேட செய்தி: யாழ்ப்பாண மக்களுக்கான சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்!