சிறந்த தலைமைத்துவம் கொண்ட ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க தயார் - திஸ்ஸ அத்தனாயக்க தெரிவிப்பு

11shares
Image

நாட்டிற்கு பொருத்தமான சிறந்த தலைமைத்துவமுடைய ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதற்கு தயாரகவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மிகவும் குழப்பமான நிலையில் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டி மல்வத்து பீட மாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களிற்கு புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகவே அமைந்துள்ளது எனவே நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மக்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுக்கவேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

நாட்டின் வெற்றியை நோக்கிய பாதையில் உறுதியாக இருக்கும் தலைவர் ஒருவரை தேர்வு செய்வதற்கான காலம் கனிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டிற்கு பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதற்கு தயாரகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டுமானால் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, கட்சியின் தலைமைத்தும் மாற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!