மஹிந்தவின் முக்கிய அறிவிப்பு!! ஆட்சிக்கு ஆபத்தா??

98shares

தங்களுடன்இணைந்து கொள்ள வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்காமல் இருப்பதற்குதன்னால் முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவ்வாறுவருபவர்கள் தம்மை புறந்தளளியவர்களாக இருந்தாலும் தமக்கு எதிராக செயற்பட்டவர்களாக இருந்தாலும் தம்மை விட்டுச் சென்றவர்களாக இருந்தாலும் அவர்களை வரவேற்பதைத் தவிரவேறு வழியில்லை என்று கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹரகமநகர சபைக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மஹிந்தராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தம்மோடுஇணைய வருபவர்களை வரவேற்காவிடின் தாம் தொடர்ந்தும் சிறு குழுவுடன் எதிர்க் கட்சியில்இருப்பதற்கே ஏற்படும் எனவும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

அத்துடன்பிரதேச அரசியலுக்கும் தேசிய அரசியலுக்கும் இடையிலான வேறுபாட்டை எல்லோரும்விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியும்பிரதமரும் மாறி மாறி திருடன் என சாடிக்கொள்கின்றனர் எனினும் தற்பொழுது அர்ஜுன்அலோசியஸிடம் பணம் பெற்ற 118 பேர் பட்டியல் வெளியாகியிருக்கின்றது எனவும் இதுதான்இன்று நாட்டின் அரசியல் நிலவரம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால்,இந்த அரசாங்கத்தை விரைவில் வெளியேற்றுவதற்காக எம்மோடு இணைய வருகின்ற அனைவருடனும்கைகோர்க்க வேண்டியுள்ளதாக இருக்கின்றதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சதெரிவித்துள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!