மைத்திரியே பதவியை தரவிடாமல் தடுத்தார்: அமைச்சர் சரத்பொன்சேகா குற்றச்சாட்டு

443shares

சட்டம் ஒழுங்கு அமைச்சை தனக்கு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரேரித்ததாக அமைச்சர் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த அமைச்சு பதவியை தரவிடாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுத்து விட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் நேற்றும், இன்றும் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது நிலையான அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா நியமிக்கப்பட்டார்.

எனினும், சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவுக்கு வழங்க்கப்படும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவருக்கு அந்த அமைச்சு பதவி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

“சொல்வதைத் தெளிவாகச் சொல்கின்னே். ஐ.தே.க.யிலுள்ள பலர் தனக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சைத் தரவேண்டும் என எதிர்பார்த்தனர்.

சட்டம் ஒழுங்கு அமைச்சை தனக்கு வழங்குமாறு பிரதமர் பிரேரித்த போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அதனைத் தரவிடாமல் தடுத்தது விட்டார் என சரத்பொன்சேகா” தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!