ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதில்லை: ஜனாதிபதி திட்டவட்டம்

252shares

மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பீ.பீ.சி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

முந்தைய நிலைப்பாடே எனது தற்போதைய நிலைப்பாடாகும். நான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஏற்கனவே கூறி விட்டேன்.

எனினும் மீண்டும், மீண்டும் என்னிடம் இந்த கேள்வியை கேட்கின்றனர். ஏன் திரும்ப திரும்ப கேட்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை எனவும் ஜனாதிபதித் தேர்தல் இலங்கையில் மீண்டும் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே கூறியிருந்தார்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தமது கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!