வெற்றிகரமாக நடந்து முடிந்த கிம் - ட்ரம்முக்கிடையிலான சந்திப்பு; மூன்றாம் உலகப்போர் தடுக்கப்பட்டு விட்டது!

72shares
Image

வடகொரிய தலைவர் கிம் யொங் வுன்னிற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று சிங்கப்பூரில் திட்டமிட்ட படியே வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இணைந்து பயணிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று செவ்வாய்க்கழமை சிங்கப்பூரில் சென்தோச தீவில் உள்ள சுற்றுலா விடுதியில் இடம்பெற்றது.

பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், இதன் போது பல தரப்பட்ட விடயங்கள் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத பேச்சுக்களுக்காக விடுதிக்கு வருகை தந்த ட்ரம்ப் மற்றும் கிம் யொங் வுன் ஆகியோர் முதலில் கைகுலுக்கி கொண்டு பேச்சுக்களை ஆரம்பித்திருந்தனர்.

இரு துருவங்களாக இருந்த இருவருக்கும் இடையில் இடம்பெற்ற இந்த கைகுலுக்கல் சர்வதேச ரீதயில் சமாதானத்திற்கான அறிகுறி எனவும் உருவாகவிருந்த மூன்றாம் உலகப்போர் தடுக்கப்பட்டு விட்டதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பேச்சுகளின் போது கருத்து தெரிவித்த ட்ரம்ப். பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இணைந்து பயணிப்போம் எனவும், இணைந்து செயற்படாத வரை பிரச்சினைகளை தீர்ப்பது சாத்தியமில்லையெனவும், இனிவரும் காலத்தில் அதிக கரிசனையுடன் செயற்படுவோம் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், பல சிக்கல்களையும் கஷ்டங்களையும் தீர்த்து வெற்றிகரமான பாதையாக மாற்றியமைத்ததாக குறிப்பிட்ட ட்ரம்ப், இனிவரும் காலத்தில் சகல விடயங்களும் வெற்றிகரமாக நிறைவேறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, ட்ரம்பின் கருத்தை முழுமையாக ஆதரித்த வடகொரிய தலைவர் கிம், அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புடன் பயணிக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது மிகவும் சவால்மிக்கது என்றாலும், அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் அணுவாயுத சோதனை மற்றும் ஏவுகணை தயாரிப்பால் அமெரிக்கா கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளியிட்டு வந்ததோடு, பொருளாதார தடைகளையும் விதித்திருந்தது.

இரு நாடுகளுக்கும் இடையில் பாரிய போர் ஏற்படும் சமிக்ஞை வெளிப்பட்டு வந்த நிலையில் இவ்வாறான ஒரு சந்திப்பு இடம்பெற்றுள்ளமையானது, உலக சமாதானத்திற்கான சிறந்த சமிக்ஞையென அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

பல கட்ட நிராகரிப்புக்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு இன்று திட்டமிட்ட படி வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பு நடைபெறுமா என்ற ஐயம் கடந்த வாரமும் நீடித்த நிலையில், வடகொரியா தமது அணுவாயுத கிடங்கொன்றை கடந்த வாரம் நிர்மூலமாக்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, கிம்முடனான இவ்வாறான விடயங்களைத் தொடர்ந்து கிம்முடனான சந்திப்பை உறுதிசெய்த ட்ரம்ப், இன்றைய சந்திப்பில் சாதகமான பதில்களையும் வழங்கியுள்ளார்.

அத்துடன் இந்த சந்திப்பினால் அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையில் நல்ல சுமூகமான உறவுகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
அதிவிசேட செய்தி: மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கை; அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

அதிவிசேட செய்தி: மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கை; அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி; தற்போதைய நிலவரம் என்ன?

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி; தற்போதைய நிலவரம் என்ன?

விசேட செய்தி: யாழ்ப்பாண மக்களுக்கான சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்!

விசேட செய்தி: யாழ்ப்பாண மக்களுக்கான சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்!