“வெள்ளைக்கொடி படுகொலைகள்”: கலம் மெக்ரேயால் வெளியிடப்பட்ட மற்றுமொரு ஆவணப்படம்!

73shares

ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் யுத்தக் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களை உள்ளடக்கி ஆவணப்படமொன்றை தயாரித்து வெளியிட்டிருந்த கலம் மெகரேயினால் பிரித்தானிய இராணுவத்தினரால் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் ஆவணப்படமொன்றை தயாரித்துள்ளார்.

47 ஆண்டுகளுக்கு முன்னர் அயர்லாந்தில் எட்டுமாத கர்ப்பிணி தாய் மற்றும் கத்தோலிக்க அருட்தந்தை ஆகியோர் உட்பட 11 பேரை படுகொலை செய்ததை புலனாய்வுக்குட்படுத்தியுள்ள “த பெலிமேர்ப்ஃபீ பிரசிடன்ட்” என்ற ஆவணப்படம் பிரித்தானியாவின் ஷேர்பீல்ட் ஆவணப்பட விழாவில் இன்று (11.06.2018) திரையிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய இராணுவத்தின் படுகொலையிலிருந்து உயிர் தப்பிய பொபி கிளார்க், கலம் மெக்ரேயின் ஆவணப்படத்தில் தெளிவுபடுத்துவதற்கு அமைய கத்தோலிக்க பாதிரியார் வெள்ளைக்கொடியுடன் வந்துகொண்டிருந்த போதே பிரித்தானியாவின் பிரசூட் படையணி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரின் மேற்குப் பகுதியிலுள்ள பெலிமேர்ப்ஃபீ குடியிருப்புத் தொகுதியில் 1971 ஆம் ஆண்டு ஸ்னைபர் துப்பாக்கிதாரி ஒருவரினால் சுடப்பட்ட பொபி கிளார்க் விழுந்திருந்த போது அருகிலுள்ள கிராமத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் அருட்தந்தை ஹியூ முலன், வெள்ளைத் துணியொன்றை தலைக்கு மேல் உயர்த்தி பிடித்துக்கொண்டு உதவிக்காக வந்திருக்கின்றார்.

அம்பியூலன்ஸ் வண்டியை வரவழைப்பதற்காக தொலைபேசி அழைப்பை எடுப்பதற்காக சென்ற போது பிரித்தானிய பரசூட் படையினர் அவர் மீது இரண்டு தடவைகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர், இதனால் காயமடைந்த அருட்தந்தை முலனின் உயிர் 20 நிமிடங்களில் பிரிந்துள்ளது.

( Bloody Sunday - 30th January 1972 ) இவர் உட்பட 11 பேரை படுகொலை செய்து ஐந்து மாதங்களின் பின்னர் பிரித்தானிய இராணுவத்தினரால் நிராயுதபாணிகளான கத்தோலிக்கர்கள் 13 பேர் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் “இரத்த ஞாயிறு” (Bloody Sunday) என வரலாற்றில் பதிவாகியுள்ளது.

( Callum Macrae ) பிரித்தானிய இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களில் ஒன்றான “பெலிமேர்பி மனிதப் படுகொலை” வெளிக்கொணரப்பட வேண்டிய ஒன்றென ஸ்ரீலங்கா உட்பட உலக நாடுகள் பலவற்றில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களை ஆவணப்படமாகத் தயாரித்து அம்பலப்படுத்திவரும் உலகின் முன்னணி ஆவணப்பட இயக்குநர் கலம் மெக்ரே தெரிவிக்கின்றார்.

நீதி கோரி உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் மாத்திரமன்றி, இவ்வாறான கொடூரங்களை மூடிமறைப்பதற்கு அரச இயந்திரம் தெரிவிக்கும் தகவல்கள் சோடிக்கப்பட்ட அப்பட்டமான கட்டுக் கதைகள் என்பது இந்த ஆவணப்படம் மூலம் நிரூபித்துள்ளதாகவும் கலன்ம் மெக்ரே ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்தார்.

“ஆயுததாரிகள் என்று சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய தரப்பினரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கு செய்துள்ள அநீதி என்றும் தெரிவிக்கும் கலம் மெக்ரே, இவ்வாறான நடவடிக்கைகள் வட அயர்லாந்தில் உண்மைக்கும் நல்லிணக்களத்திற்குமான செயற்பாட்டிற்கு இவை பெரும் தடையாக இருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

தற்போது 85 வயதை எட்டியுள்ள பொபி கிளார்க் உட்பட பிரித்தானிய பிரசூட் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 11 பேரினது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட 120 பேருக்காக பெலிமேர்ப்ஃபீ குடியிருப்புத் தொகுதியிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் விசேட திரையிடலொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் யுத்தக் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்களை உள்ளடக்கி கலம் மெக்ரே தயாரித்த “நோ பயர் ஷோன்” ஆவணப்படத்தை அடுத்து ஸ்ரீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கடந்த ஆட்சியினர் மாத்திரமன்றி தற்போதைய ஆட்சியான மைத்ரி – ரணில் தலைமையிலான அரசாங்கமும் தொடர்ச்சியாக அழுத்தங்களை சந்தித்து வருகின்றது.

( Callum Macrae asks Sri Lanka president to accept Sinhala co ) மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்து பொதுவேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஸ்ரீலங்காவின் தற்போதைய அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன ஆட்சிபீடம் ஏறி ஒரு சில மாதங்களுக்குள் அவரை நேரில் சந்திக்க முயற்சித்திருந்த கலம் மெக்ரே, செனல் 4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட “நோ பயர் ஷோன்” ஆவணப்படத்தை ஸ்ரீலங்காவில் திரையிடுவதற்கு அனுமதி அளிப்பதுடன், இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு நீதியை நிலைநாட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையும் விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
அதிவிசேட செய்தி: மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கை; அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

அதிவிசேட செய்தி: மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கை; அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி; தற்போதைய நிலவரம் என்ன?

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி; தற்போதைய நிலவரம் என்ன?

கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல் ; 9 பேர் பலி.. 12000 மின் கம்பங்கள் சேதம்.!

கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல் ; 9 பேர் பலி.. 12000 மின் கம்பங்கள் சேதம்.!